அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட், அஷோக் செல்வன், சரத்குமார், போர் தொழில், ஓடிடி, ஹாட்ஸ்டார்

ஆர். சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘போர் தொழில்’ எனும் திரைப்படத்தினை தயாரித்திருப்பதன் மூலம், இந்தியாவின் பிரபலமான தயாரிப்பு நிறுவனமான அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் தமிழ் திரையுலகில் நேரடியாக களமிறங்கியிருக்கிறது.

இந்தியாவின் வித்தியாசமான உள்ளடக்கத்துடன் கூடிய படைப்புகளை தயாரிப்பதில் பெயர் பெற்ற நிறுவனம் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட். இந்நிறுவனம் இ4 எக்ஸ்பிரிமெண்ட்ஸ் மற்றும் எப்ரியஸ் ஸ்டுடியோ ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து புலனாய்வு திரில்லர் ஜானரிலான ‘போர் தொழில்’ எனும் திரைப்படத்தை தயாரித்து வெளியிடுகிறது. அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தில் அசோக் செல்வன், சரத்குமார், நிகிலா விமல் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

தயாரிப்பாளர்கள் இப்படத்தின் டைட்டிலை இன்று வெளியிட்டிருக்கிறார்கள். இதற்காக பிரத்யேகமான காணொளி ஒன்றையும் உருவாக்கி வெளியிட்டிருக்கின்றனர். ‘போர் தொழில்’ எனும் தலைப்பு, ‘ஆர்ட் ஆஃப் வார்’ என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. விரைவில் திரையரங்குகளில் வெளியிட தயாராகி இருக்கும் இந்த திரைப்படம், ரசிகர்களுக்கு வித்தியாசமான திரில்லர் அனுபவத்தை வழங்கும் என உறுதி அளிக்கின்றனர்.

இந்நிறுவனம் இதற்கு முன் ‘ஹம்பிள் பொலிட்டீசியன் நோக்ராஜ் (கன்னடம்), வதம் (தமிழ்), குருதிக்காலம் (தமிழ்), இரு துருவம் (தமிழ்) உள்ளிட்ட பல பிரபலமான இணையத் தொடர்களை தயாரித்து வழங்கி உள்ளது. மேலும் இந்நிறுவனம், தென்னிந்திய பொழுதுபோக்குத்துறை சந்தையில் மாறுபட்ட உள்ளடக்கத்தை உருவாக்குவதற்கான வலுவான அர்ப்பணிப்புடன் பல்வேறு மொழிகளில் திரைப்படம் மற்றும் பிரத்யேக இணைய தொடர்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறது.

அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட்

அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் என்பது இணைய தொடர்கள், தொலைக்காட்சி தொடர்கள், திரைப்படங்கள், ஆவணப் படங்கள் மற்றும் அனிமேஷன் எனப்படும் சித்திர படங்களைக் கொண்ட உள்ளடக்கத்தை உருவாக்குவதில் ஒரு முன்னணி நிறுவனம் மற்றும் படைப்புத்திறன் மிகு அரங்கத்தையும் கொண்டது. ஆதித்யா பிர்லா குழுமத்தின் ஒரு முயற்சியாக தொடங்கப்பட்டிருக்கும் இந்நிறுவனத்திற்கு, பொழுதுபோக்கு துறையில் அனுபவசாலியான சமீர் நாயர் தலைமை ஏற்றிருக்கிறார். ‘ருத்ரா: தி எட்ஜ் ஆஃப் டார்க்னஸ்’ , ‘மித்யா’, கிரிமினல் ஜஸ்டிஸ் , ஸ்கேம் 1992 : தி ஹர்ஷத் மேத்தா ஸ்டோரி’ போன்ற நிகழ்ச்சிகளை அனைத்து மொழிகளிலும் தயாரித்து வெளியிட்டது.
‘உண்டேகி’, ‘பௌக்கால்’ என பலரின் பாராட்டுகளையும் பெற்ற படைப்புகளையும் வழங்கி இருக்கிறார்கள். நடிகை நந்திதா தாஸ் இயக்கத்தில் கபில் சர்மா நடித்த திரைப்படமான ‘ஸ்விகாடோ’ சமீபத்தில் உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாக பெரும் பாராட்டை பெற்றது. அபர்ணா சென் இயக்கிய ‘தி ரேப்பிஸ்ட்’, சமீபத்தில் பூசன் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு, மதிப்புமிகு கிம் ஜிஜோக் விருதை வென்றது. தற்போது ‘சர்மாஜி கி பேட்டி’ மற்றும் ‘ ஜப் குலீ கிதாப்’ என பல படைப்புகளை திரையரங்கம் மற்றும் டிஜிட்டல் தளங்களில் நேரடியாக வெளியிட கூடிய வகையில் தயாரித்து வருகிறது. மேலும் அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம்- ‘நெட்ப்ளிக்ஸ்’, ‘டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்’, ‘அமேசான் பிரைம் வீடியோ’, ‘சோனி லைவ்’, ‘எம் எக்ஸ் பிளேயர்’, ‘ஜீ 5 ‘மற்றும் ‘வூத் செலக்ட்’ போன்ற முன்னணி டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் தளங்களுடன் ஆக்கபூர்வமான கூட்டணியை அமைத்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.