
சென்னையில் வரும் 21ஆம் தேதி நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் ஒரே நிமிடத்தில் விற்றுத்தீர்ந்ததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
சேப்பாக்கில் வரும் 21ஆம் தேதி சென்னை – ஐதராபாத் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற உள்ளது. அதற்கான டிக்கெட் விற்பனை இன்று காலை தொடங்கியது.
சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் உள்ள இரண்டு கவுன்ட்டர்களில் ரூ.1,500-க்கான (சி, டி, இ கீழ்தளம்) டிக்கெட்டுகள் விற்கப்படுகிறது. ரூ.2,000, ரூ.2,500 ஆகிய விலைக்கான டிக்கெட்டுகள் கவுன்ட்டரிலும், ஆன்லைன் மூலமும் வாங்கிக் கொள்ளலாம்.

இன்று காலை 9.30 மணிக்கு கவுன்ட்டரில் டிக்கெட் விற்பனை தொடங்கியது. ரசிகர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட்டுகளை வாங்கி சென்றனர். டிக்கெட் விற்பனை மிகவும் விறுவிறுப்பாக இருந்தது.
இந்த நிலையில் கவுன்ட்டரில் விற்பனை தொடங்கிய மூன்றே மணி நேரத்தில் டிக்கெட் தீர்ந்து போனது. ஆன்லைனிலும் ஒரே நிமிடத்தில் டிக்கெட் தீர்ந்து போனதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
newstm.in