காத்மாண்டு : இமயமலை மலைப்பகுதியில் காணாமல் போன பெண் மலையேற்ற வீராங்கனை மீட்கப்பட்டார்.
இமயமலை அடிவாரத்தில் இருக்கும், நேபாளத்தில் மலைப் பகுதிகள் அதிகம் உள்ளன.
இங்குள்ள, மலைப்பகுதிகளில் பலரும் மலையேற்றம் செல்வதுண்டு. அந்த வகையில், இந்தியாவைச் சேர்ந்த, பெண் மலையேற்ற வீராங்கனை பல்ஜீத் கவுர், இமயமலையின் 10வது உயரமான சிகரமான அன்னபூர்ணா மலையை ஏறும்போது, காணாமல் போனார்.
மலையேற்ற குழுவின் பொறுப்பாளர், பசாங் ெஷர்பா, பல்ஜீத் கவுர் காணாமல் போனது குறித்த, தகவலை தெரிவித்தார். இதை தொடர்ந்து, நேபாள வான்வழி தேடல் குழு, மாயமாகிய பல்ஜீத் கவுரை இன்று (ஏப்.,18)ம் தேதி, அன்னபூர்ணா மலையின், 7,363 மீட்டர் உயரத்தில் இருந்து மீட்டனர்.
தொடர்ந்து, அவருக்கு காத்மாண்டுவில் உள்ள மருத்துவமனையில், சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement