பாலியல் தொழில் நடத்திய பிரபல நடிகை கைது!!

மாடல் அழகிகளை வைத்து பாலியல் தொழில் நடத்தியதாக பாலிவுட் நடிகை ஆர்த்தி மிட்டல் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாலிவுட்டில் கேஸ்டிங் இயக்குனராகவும் நடிகையாகவும் உள்ள ஆர்த்தி மிட்டல், இளம் மாடல்களை வைத்து விபச்சாரத்தில் ஈடுபடுவதாக மும்பை காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீஸார் ரகசிய ஆபரேஷனில் ஈடுபட்டனர்.

போலீஸார் கஸ்டமர் போல் மாறுவேடத்தில் ஆர்த்தியை அணுகினர். இரண்டு நண்பர்களுக்காக இரண்டு மாடல் அழகிகள் வேண்டும் என்று போலீஸ் கூறியதற்கு, ஆர்த்தி ரூ.60,000 பணம் கேட்டுள்ளார்.

அவரை நம்ப வைக்க போலீஸ் பணம் அனுப்பிய நிலையில், இரு மாடல் அழகிகளின் போட்டோக்களை ஆர்த்தி அனுப்பியுள்ளார். மேலும் அவர்களை ஜூஹூ அல்லது கோரிகான் பகுதிகளில் உள்ள ஹோட்டல்களுக்கு அழைத்து வருவதாக கூறியுள்ளார்.

கோரேகான் பகுதியில் இரண்டு ரூம்களை புக் செய்து அங்கு போலீசார் கஸ்டமர்கள் போல தங்கினர். அந்த இடத்திற்கு ஆர்த்தி மாடல் அழகிகளுடன் வந்த நிலையில், அவர்களை கையும் களவுமாக போலீஸார் கைது செய்தனர்.

பின்னர் அவர்கல் காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மாடல் அழகிகளுக்கு ரூ.15,000 தருவதாக ஆர்த்தி கூறியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.