புதுடில்லி : போதை பொருள் தடுப்பு பணிக்குழு (ஏ.என்.டி.எப்.,)ன் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச தலைவர்கள் மாநாட்டை, நாளை (ஏப்.,19)ம் தேதி புதுடில்லியில், மத்திய உள்துறை அமைச்சர், அமித்ஷா துவக்கி வைக்கிறார்.
போதை பொருட்கள் விற்பனையை தடுப்பது மற்றும் போதைபொருள் தடுப்பு சட்டத்தின் கீழ், பதிவு செய்யப்பட்ட வழக்குகள் மீதான விசாரணையை விரைவுபடுத்துவது குறித்து, இம்மாநாட்டில் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட உள்ளது.
இதில் பங்கேற்க உள்ள, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைவர்கள், தங்களின் போதை பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்கான திட்டம் மற்றும் அது குறித்த, அச்சுறுத்தலை சமாளிப்பதற்கான, சாலை வரைபடம் ஆகியவற்றை எடுத்துரைக்க உள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement