சென்னை : நடிகர் விமல் பசங்க படத்தின் மூலம் கோலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமானவர். தொடர்ந்து சிறப்பான பல படங்களில் நடித்துள்ளார்.
களவாணி படத்தில் இவரது தெனாவட்டான நடிப்பு ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்டது. படத்தை வெற்றிப்படமாகவும் ஆக்கியது.
இந்தப் படத்தை தொடர்ந்து விமல் நடித்திருந்த வாகை சூடவா படத்தில் அப்பாவித்தனமான நடிப்பையும் கொடுத்து ரசிகர்களை கவர்ந்தார் விமல்.
செக் மோசடி வழக்கில் விமலுக்கு அபராதம் : நடிகர் விமல் பசங்க படத்தின்மூலம் கோலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமானவர். முன்னதாக பல படங்களில் துணை கேரக்டர்களில் நடித்துள்ள இவருக்கு, பசங்க படம் சிறப்பான என்ட்ரியை கொடுத்தது. இந்தப் படத்தில் அதிகமான காட்சிகள் இல்லை என்றபோதிலும், தன்னுடைய கேரக்டரை சிறப்பாக்கினார் விமல். இந்தப் படத்தை தொடர்ந்து சற்குணம் இயக்கத்தில் விமல் நடித்திருந்த களவாணி படம் அவருக்கு சிறப்பாக அமைந்தது. படத்தில் தன்னுடைய தெனாவட்டான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார்.
அடுத்ததாக வாகை சூடவா படத்தில் அப்படியே உலட்டாவாக நடித்திருந்தார் விமல். இந்தப் படத்தில் ஆட்டிற்குகூட பயப்படும் பயிற்சி ஆசிரியராக நடித்திருந்தார். தொடர்ந்து தூங்கா நகரம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, புலிவால், தேசிங்கு ராஜா, ஜன்னல் ஓரம், மஞ்சப்பை போன்ற படங்கள் இவருக்கு சிறப்பாக அமைந்தது. சினிமாவில் கண்டிப்பாக முன்னணி நடிகராக மாறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்தடுத்த தோல்விப்படங்களால் இவரது சினிமா கேரியர் மாறியது.
நீண்ட காலங்கள் தனக்கான பிரேக்கிற்காக விமல் காத்திருந்த நிலையில், சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான விலங்கு வெப் தொடர், அவருக்கு சிறப்பாக அமைந்தது. நல்ல விமர்சனங்களை பெற்றுத் தந்துள்ளது. இதையடுத்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தெய்வ மச்சான், குலசாமி படங்களில் நடித்து முடித்துள்ளார். மன்னர் வகையறா படத்தில் நடித்து தயாரித்திருந்தார் விமல். படம் அவருக்கு கைக்கொடுக்கவில்லை.

இந்நிலையில் இந்தப் படத்திற்காக கோபி என்பவரிடம் இருந்து 4.50 கோடி ரூபாயை கடனாக பெற்றுள்ளார் விமல். இந்தப் பணத்தை திருப்பித் தராத நிலையில், காசோலையாக கொடுத்துள்ளார். ஆனால் வங்கியில் பணம் இல்லை என்று திரும்பி வந்துள்ளது. இதைடுதது விமல் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் கோபி, செக் மோசடி வழக்கை போட்டுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், விமலுக்கு ரூ.300 அபராதமாக விதித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த அபராத விதிப்பை வைத்து சமூக வலைதளங்களில் அதிகமான மீம்ஸ்கள் வெளியாகியுள்ளன. இவ்வளவு பெரிய தொகையை கட்ட விமல் எங்கே போவாரு என்றும், நல்லவேளை ஹெல்மெட் போடாமல் போயிருந்தால் 1000 ரூபாய் கட்ட வேண்டியது இருந்திருக்கும் என்றும் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். ஆர்பிஐயில் லோன் வாங்கி கட்டுவாரோ என்றும் இந்த பெருந்தொகையை கட்ட அவருக்கு சமூக ஆர்வலர்கள் உதவ வேண்டும் என்றும் பலவிதமான மீம்ஸ்கள் வெளியாகி வருகின்றன.