வீட்டின் முற்றத்தில் விழுந்த கூடைபந்து: 6 வயது சிறுமி மீது இளைஞர் நடத்திய வெறிச்செயல்


வடக்கு கரோலினாவில் வீட்டின் முற்றத்தில் கூடைப் பந்தை உருட்டியதை தொடர்ந்து, 6 வயது சிறுமி மற்றும் அவரது பெற்றோர்கள் மீது இளைஞர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இளைஞர் வெறிச்செயல்

வடக்கு கரோலினாவில் கூடைப்பந்தை தனது வீட்டின் முற்றத்தில் உருட்டியதால், ஆறு வயது சிறுமி மற்றும் அவரது பெற்றோரை துப்பாக்கியால் சுட்டதாக குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரண்டு நாள் தேடுதல் வேட்டை நடத்தப்பட்ட நிலையில், குற்றம் சாட்டப்பட்ட 24 வயதான ராபர்ட் லூயிஸ் சிங்லெட்டரி(Robert Louis Singletary) வியாழக்கிழமை பொலிஸாரிடம் சரணடைந்தாக பிபிசி தெரிவித்துள்ளது.

வீட்டின் முற்றத்தில் விழுந்த கூடைபந்து: 6 வயது சிறுமி மீது இளைஞர் நடத்திய வெறிச்செயல் | Us Man Shoot 6 Yr Girl After Basketball Rolls YardHillsborough County Sheriff’s Office

இளைஞரின் வெறிச்செயலில் படுகாயமடைந்த சிறுமியும் தாயும் மருத்துவமனையில் இருந்து  டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், தந்தை இன்னும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் துப்பாக்கி சூடு நடத்திய இளைஞர் மீது துப்பாக்கியை வைத்திருந்தது மற்றும் கொல்லும் நோக்கத்துடன் கொடிய ஆயுதத்தால் தாக்கியதற்கான இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

வீட்டின் முற்றத்தில் விழுந்த கூடைபந்து: 6 வயது சிறுமி மீது இளைஞர் நடத்திய வெறிச்செயல் | Us Man Shoot 6 Yr Girl After Basketball Rolls YardWSOC TV


சம்பவத்தின் பின்னணி

இந்த சம்பவம் தொடர்பாக இளைஞர் ராபர்ட் லூயிஸ் சிங்லெட்டரியின் அண்டை வீட்டார் வழங்கிய தகவலில், செவ்வாயன்று இளைஞரின் வீட்டு முற்றத்தில் கூடைப்பந்து உருண்ட போது அதை மீட்கச் சென்ற சிறுமியிடம் இளைஞர் கத்தினார்.

இதனை குழந்தை தனது தந்தையிடம் தெரிவித்த போது, அவர்கள் சிங்லெட்டரியின் வீட்டிற்குச் சென்று அவரை எதிர்கொண்டார்கள், “என் குழந்தையை கேலி செய்வதை நிறுத்துங்கள், உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை இருந்தால் என்னிடம் வாருங்கள், நாங்கள் அதை சரி செய்வோம்” என முறையிட்டனர்.

அப்போது வீட்டில் இருந்து துப்பாக்கியுடன் வெளியே வந்த இளைஞர் 6 வயது சிறுமியையும், அவரது பெற்றோரையும் சுட்டுத் தள்ளினார் என அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

வீட்டின் முற்றத்தில் விழுந்த கூடைபந்து: 6 வயது சிறுமி மீது இளைஞர் நடத்திய வெறிச்செயல் | Us Man Shoot 6 Yr Girl After Basketball Rolls YardWSOC TV

ஆனால் சிறுமியின் தாயார் ஆஷ்லே ஹில்டர்பிரான்ட் CNN செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், தனது மகளின் கன்னத்தில் இருந்து தோட்டா துண்டுகளை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.

கூடைப்பந்து விளையாட்டிற்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை, இந்த தாக்குதல் சம்பவத்தின் போது நாங்கள் குடும்பமாக கிரில்லிங் செய்வதாகவும், தனது மகள் பைக்கில் சென்று கொண்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.