Trisha: தீராக் காதல்: காதல் சின்னத்தை இடது தோளில் டாட்டு குத்திய த்ரிஷா

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
Kundhavai Trisha: பொன்னியின் செல்வன் 2 படத்தை விளம்பரம் செய்து வரும் த்ரிஷாவின் தீராக் காதல் குறித்து ரசிகர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

​பொன்னியின் செல்வன் 2​மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் பச்சன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் பொன்னியின் செல்வன் 2 படம் ஏப்ரல் 28ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இதையடுத்து விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஜெயம் ரவி உள்ளிட்டோர் பல்வேறு நகரங்களுக்கு சென்று படத்தை விளம்பரம் செய்து வருகிறார்கள். செல்லும் இடமெல்லாம் த்ரிஷாவுக்கு அமோக வரவேற்பாக இருக்கிறது.
​டாட்டு​பொன்னியின் செல்வன் 2 படத்தை த்ரிஷா விளம்பரம் செய்து வரும் இந்த நேரத்தில் அவரின் தீராக் காதல் பற்றி பேசப்படுகிறது. சினிமா மீது தீராக் காதல் கொண்டவர் த்ரிஷா. அதனால் தான் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கிறார். தன் தீராக் காதலின் அடையாளமாக வீடியோ கேமராவை தன் இடது தோளில் பச்சை குத்தியிருக்கிறார் த்ரிஷா. ஸ்லீவ்லெஸ் உடையில் பொன்னியின் செல்வன் 2 விழாவுக்கு வந்த த்ரிஷாவின் தோளில் இருந்த டாட்டுவை பார்த்த ரசிகர்கள் அது பற்றி பேசுகிறார்கள்.
​சினிமா​தன் உடம்பில் உயிர் இருக்கும் வரை படங்களில் நடிக்க விரும்புவதாக த்ரிஷா தெரிவித்தார். தன் தீராக் காதலை புரிந்து கொண்டு தன்னை ஏற்றுக் கொள்பவரை தான் திருமணம் செய்து கொள்வேன் என அவர் மேலும் தெரிவித்தார். அத்தகைய நபர் விரைவில் கிடைக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் பிரார்த்தனை ஆகும்.
​திருமணம்​Trisha: த்ரிஷாவின் திருமணம் நின்றது ஏன்?: அம்மா உமா சொன்ன உண்மைமுன்னதாக த்ரிஷாவுக்கும், தயாரிப்பாளர் வருண் மணியனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால் திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிக்கக் கூடாது என வருண் மணியன் கூறியதால் திருமணத்தை நிறுத்தினார் த்ரிஷா என அப்பொழுது கூறப்பட்டது. இந்நிலையில் திருமணம் நின்று போனதற்கான காரணத்தை த்ரிஷாவின் அம்மா உமா கூறியதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.

​கேள்வி​Trisha: அரசியலுக்கு வரும் ஆசை இருக்கா?: த்ரிஷாவின் தெளிவான பதில்பொன்னியின் செல்வன் 2 படத்தை விளம்பரம் செய்யச் செல்லும் இடங்களில் எல்லாம் த்ரிஷாவுக்கு ஒரு சங்கடம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. அவர் மேடைக்கு வந்ததுமே எப்பொழுது திருமணம் என ரசிகர்கள் கேட்கிறார்கள். பதில் சொல்ல முடியாமல் சிரிக்கிறார் த்ரிஷா. ஒரு கட்டத்தில் ரசிகர்களை கை காட்டி உயிர் அவர்களுடையது என கூறிவிட்டார்.

​லியோ​லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் லியோ படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் த்ரிஷா. அந்த ஷூட்டிங்கில் இருந்து பிரேக் எடுத்துவிட்டு வந்து பொன்னியின் செல்வன் 2 படத்தை விளம்பரம் செய்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் லியோ அப்டேட் கொடுக்குமாறு த்ரிஷாவிடம் ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள். படப்பிடிப்பு நல்லபடியாக செல்கிறது. உங்கள் தளபதி விஜய் நன்றாக இருக்கிறார். படம் அக்டோபர் மாதம் ரிலீஸாகும் என கூறி வருகிறார்.

​Leo: ஆர்டர் போட்ட லியோ லோகேஷ் கனகராஜ்: பதில் சொல்ல முடியாமல் தவிக்கும் ‘குந்தவை’த்ரிஷா​

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.