பெங்களூரு, கர்நாடக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் பழனிசாமி அணி வேட்பாளரின் மனு ஏற்கப்பட்டது. பன்னீர் செல்வம் அணியில் ஒருவர் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
ஒருவர் மனு அ.தி.மு.க., கட்சி எனவும், மற்றொருவர் மனு சுயேச்சையாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
மே 10ல் நடக்கவிருக்கும் கர்நாடக சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது.
இதையடுத்து, பெங்களூரில் உள்ள புலிகேசி நகர் தொகுதியில், அ.தி.மு.க., வேட்பாளராக பழனிசாமி அணியின் மாநில அவைத் தலைவர் அன்பரசன் மனு தாக்கல் செய்தார்.
பன்னீர் செல்வம் அணி சார்பாக தங்கவயலில் மாநில தலைவர் ஆனந்த்ராஜ்; காந்தி நகரில் மாநில செயலர் குமார்; புலிகேசி நகரில் மாநில மாணவர் அணிச் செயலர் நெடுஞ்செழியன் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
நேற்று மனுக்களை பரிசீலனை செய்த தேர்தல் அதிகாரிகள், பழனிசாமி அணி வேட்பாளரின் மனுவை ஏற்றனர்.
பன்னீர் செல்வம் அணியின் குமாரை அ.தி.மு.க., கட்சி வேட்பாளராகவும்; ‘பி பாரம்’ இல்லாததால் தங்கவயல் ஆனந்த்ராஜை சுயேச்சையாகவும் ஏற்றனர்.
ஆனால், புலிகேசி நகரில் தாக்கல் செய்த நெடுஞ்செழியனின் மனுவில் சில இடங்களில் கையெழுத்து போடவில்லை என்பதால் அது தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து, அவர் தன் வழக்கறிஞர் மூலம் சிறப்பு தேர்தல் அதிகாரி உஜ்வல் கோஷை சந்தித்து முறையிட்டுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement