தண்ணீர் பாவனை தொடர்பில் பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை


நாட்டில் தற்பொழுது நிலவி வரும் வறட்சியான காலநிலை காரணமாக நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

சுத்திகரிக்கப்பட்ட நீரை குடிப்பதற்கும் சமைப்பதற்கும் மட்டும் பயன்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது.

தண்ணீர் பாவனை தொடர்பில் பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Water Supply Nwsdb Water Cut

நாட்டில் கடுமையான வெப்பத்துடனான காலநிலை நீடித்து வருவதனால் நீரிற்கான தேவை வெகுவாக உயர்வடைந்துள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

விவசாய செய்கைகளுக்காகவும் ஏனைய தேவைகளுக்காகவும் குடிநீரை பயன்படுத்த வேண்டாம் என சபையின் பொது முகாமையாளர் வசந்த இளங்கசிங்க தெரிவித்துள்ளார்.

நீர் பயன்பாடு அதிகரிக்கப்பட்டுள்ள காரணத்தினால் உயரமான இடங்களுக்கு உரிய அழுத்தத்துடன் நீரை விநியோகிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது என தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும் நீர் விநியோகத்தை வரையறுப்பதற்கு இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.