நாகர்கோவில் : மாணவிகளுக்கு காதல் வலை வீசி நண்பர்களுக்கு விருந்தாக்கிய வாலிபருக்கு போலீசார் வலைவீச்சு.!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அருகே பார்வதிபுரம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ். இவர் பள்ளி மாணவிகளிடம் நட்பாக பேசி பழகி அவர்களை காதல் வலையில் சிக்க வைத்து அவர்களிடம் நெருக்கமாக இருந்துவிட்டு பின்னர் அவர்களை கழற்றி விடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு விக்னேஷ் ஒரு மாணவியை காதலிப்பது போல் நடித்து நண்பனின் வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதை வைத்தே அந்த மாணவியை மிரட்டி தன் நண்பர்கள் இரண்டு பேருக்கு விருந்தாக்கி உள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக விக்னேஷ் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் படி போலீஸார் விக்னேஷ் உள்ளிட்ட 3 பேர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்தனர். அதுமட்டுமல்லாமல், விக்னேஷ் மீது வடசேரி காவல் நிலையத்தில் அடிதடி வழக்கு, கஞ்சா வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், விக்னேஷ் வழக்கம் போல் ஆசாரிபள்ளத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவியை காதலிப்பதாக கூறி அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து, மாணவி தனக்கு நடந்த கொடுமைகளை பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் விக்னேஷ் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். தற்போது விக்னேஷ் மீது இரண்டாவது முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இரண்டு முறை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டும் போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாகி இருந்து வரும் விக்னேஷை போலீசார் தொடர்ந்து தீவிரமாக தேடி வருகிறார்கள்.