
மார்க் ஆண்டனி படத்தின் புதிய அப்டேட்!
நடிகர் விஷால் தற்போது இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'மார்க் ஆண்டனி' படத்தில் நடித்து வருகிறார். ரித்து வர்மா, எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். மினி ஸ்டுடியோ நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தின் முதல் பார்வை வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
சமீபத்தில் இந்த படத்தில் இடம்பெறும் குத்து பாடலுக்காக படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இந்த பாடல் காட்சிகளுக்கு பிரபல நடன இயக்குனர் பாபா பாஸ்கர் நடன பயிற்சி அளித்துள்ளார். இந்நிலையில் இன்றுடன் இந்த பாடல் காட்சி நிறைவு பெற்றுள்ளது. இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு துவங்க உள்ளது.