வெளிநாடு டூருக்கு ரெடியாகும் ஸ்டாலின்… 3 நாடுகள், 7 நாட்கள்… மே 2ல் முக்கிய முடிவு!

தமிழகத்தில் வரும் 2024ஆம் ஆண்டு ஜனவரி 10, 11 ஆகிய நாட்களில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. இதையொட்டி வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கவும் முதல்வர்

திட்டமிட்டுள்ளார். இதற்காக லண்டன் செல்லவிருப்பதாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமின்றி சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கும் செல்வார் எனத் தெரிகிறது.

ஸ்டாலின் துபாய் பயணம்; வாய் கொடுத்து புண்ணாக்கி கொண்ட பாஜக பிரமுகர்!

ஸ்டாலின் வெளிநாட்டு பயணம்

சுமார் ஒரு வார காலத்திற்கு இந்தப் பயணம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபற்றி வரும் மே 2ஆம் தேதி நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும். முதல்வருடன் பல்வேறு துறை சார்ந்த அமைச்சர்களும் செல்லவுள்ளனர். அதுமட்டுமின்றி சமீபத்தில் நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் இடம்பெற்ற புதிய அறிவிப்புகளை நிறைவேற்றுவது தொடர்பாகவும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.

2022 துபாய் டூர்

முதல்வர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் துபாய், அபுதாபி உள்ளிட்ட ஐக்கிய அரபு அமீரக நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றது தற்போது வைரலாகி வருகிறது. அப்போது பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு சுமார் 6,100 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் கையெழுதாகின.

புதிய முதலீடுகள்

அதில், துபாயின் நோபிள் ஸ்டீல்ஸ் நிறுவனம் தமிழகத்தில் புதிதாக ஒரு ஸ்டீல் உற்பத்தி தளத்தை 1,000 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்க திட்டமிடப்பட்டது. இதன்மூலம் 1,200 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனக் கூறப்பட்டது. இதையடுத்து துபாயின் ஒயிட் ஹவுஸ் நிறுவனம் இரண்டு ஒருங்கிணைந்த தையல் ஆலைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

உணவு பூங்கா, நவீன மருத்துவமனை

150 கோடி ரூபாய் மதிப்பில் திண்டிவனத்திலும், 350 கோடி ரூபாய் மதிப்பில் வாலாஜாபாத்திலும் ஆலைகள் அமைக்க ஒப்பந்தம் கையெழுத்தானது. இது 3,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் எனக் கூறப்பட்டது. மேலும் ட்ரான்ச்வேல்டு குழுமம் 100 கோடி ரூபாய் மதிப்பில் உணவு பூங்கா அமைத்து 1,000 பேருக்கு வேலை வழங்கும் என அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் 500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை உருவாக்க ஆஸ்டர் டி.எம் ஹெல்த்கேர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டது.

லூலூ ஹைபர் மார்க்கெட்

இது 3,500 பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் என்று கூறினர். ஷெராப் குரூப் நிறுவனம் தமிழகத்தில் சரக்கு போக்குவரத்தை மேம்படுத்த இருப்புப் பாதை வசதிகள் உடன் கூடிய 500 கோடி ரூபாய் மதிப்பிலான சரக்கு போக்குவரத்து பூங்கா அமைத்து 1,000 பேருக்கு வேலை வழங்கும் எனக் கூறப்பட்டது. லூலூ குரூப் உடன் கைகோர்த்து சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் ஹைபர் மார்க்கெட் வளாகங்கள் அமைக்க ஒப்பந்தம் போடப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.