ஜாக்கெட் போடாமால் போட்டோஷூட்டா? – விமர்சித்த நெட்டிசனுக்கு சுந்தரி நடிகை பதிலடி

நடிப்பை தீவிரமாக காதலித்து வரும் கேப்ரில்லா படங்களில் தனக்கு கிடைக்கும் சிறிய வாய்ப்பை கூட கச்சிதமாக பயன்படுத்தி பெர்பார்மன்ஸ் செய்துவிடுவார். தற்போது சுந்தரி தொடரின் மூலம் சின்னதிரை ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார். பெண்களுக்கு எதிரான பிரச்னைகள், பெண்ணுரிமை தொடர்பான விவகாரங்களில் துணிச்சலாக கருத்து சொல்லும் கேப்ரில்லா, தன் மீதான விமர்சனத்திற்கும் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் சில மாதங்களுக்கு முன்னர் ஜாக்கெட் போடாமல் போட்டோ ஷூட் செய்து, சில புகைப்படங்களை அவர் வெளியிட்டிருந்தார். அதை கிண்டலடித்த சில நெட்டிசன்கள் ஜாக்கெட் போடாமல் போட்டோ ஷூட் நடத்தி, அதற்கு ‛‛ சுருங்க போகும் தோலுக்கு ஓராயிரம் விமர்சனம். சுருங்கிய பின்பும் தொடரட்டும் எனது சுதந்திரம்'' என குறிப்பிட்டு இருந்தார். தமிழருடைய பண்பையும் ஒழுக்கத்தையும் காற்றில் பறக்க விட்டுவிட்டதாக கேப்ரில்லாவை சிலர் விமர்சித்திருந்தனர்.

அந்த கமெண்டின் ஸ்கிரீன்ஷாட்டை வெளியிட்ட கேப்ரில்லா, 'திறமைக்கும், உடலுக்கும், சுய விருப்பத்திற்கும் வித்தியாசம் அறியாத வேடிக்கை மனிதர்கள்' என அந்நபருக்கு பதிலடி கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.