Ayalaan: தீபாவளிக்கு வரும் சிவகார்த்திகேயனின் அயலான்: தரமான சம்பவம் லோடிங்

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், இஷா கோபிகர் உள்ளிட்டோர் நடித்த அயலான் படம் எப்பொழுது தான் ரிலீஸாகும் என ரசிகர்கள் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

நான் Rajini Sir Style-ல தான் நடிக்கிறேன் – Sivakarthikeyan fantastic speech
படப்பிடிப்பு எப்பொழுதோ முடிந்துவிட்டது. ஆனால் சிஜி வேலை தாமதமானதால் படத்தை திட்டமிட்டபடி ரிலீஸ் செய்ய முடியவில்லை. இந்நிலையில் தான் அயலான் பற்றி சூப்பர் அப்டேட் வந்திருக்கிறது.

அயலான் படம் 2023ம் ஆண்டு தீபாவளி பண்டிகை ஸ்பெஷலாக ரிலீஸாகும் என தயாரிப்பு நிறுவனம் இன்று சமூக வலைதளத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அயலானுடன் தான் இருக்கும் போஸ்டர்களை வெளியிட்டு இந்த தீபாவளிக்கு வருகிறோம் என ட்வீட் செய்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

அவரின் ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் கூறியிருப்பதாவது,

வெறித்தனமான சம்பவம் இருக்கு. கண்டிப்பாக பறப்போம் அண்ணா. இந்த தீபாவளி நம்முடையது அண்ணா. அயலான் கண்டிப்பாக பிளாக்பஸ்டர் தான். அதை யாராலும் தடுக்க முடியாது. போஸ்டரே வேற லெவலில் இருக்கிறது.

இந்த படத்தின் ரிலீஸுக்காக தான் இத்தனை நாட்களாக காத்திருந்தோம். தீபாவளிக்காக வெயிட்டிங். இந்த தீபாவளி மிஸ் ஆகாது. ஒரு வழியாக படம் ரிலீஸாவதில் மகிழ்ச்சியே. குட்டீஸ் அனைவரும் அயலான் தான் பார்ப்போம் என அடம்பிடிக்கப் போகிறார்கள். அவர்களாலேயே படம் புது சாதனை படைக்கப் போகிறது.

புது கான்செப்ட். புது முயற்சி. வாழ்த்துக்கள் அண்ணா என தெரிவித்துள்ளனர்.

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் மாவீரன் படம் ஜூலை 29ம் தேதி ரிலீஸாகும் என ரம்ஜான் பண்டிகை அன்று அறிவிப்பு வெளியிட்டார்கள். அத்துடன் ஒரு டீஸரையும் வெளியிட்டு சிவகார்த்திகேயன் ரசிகர்களை திக்குமுக்காடச் செய்தார்கள். இந்நிலையில் பல நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட அயலான் பட ரிலீஸ் அறிவிப்பும் வந்திருக்கிறது. அடுத்தடுத்த அறிவிப்புகளால் ரசிகர்கள் சந்தோஷத்தில் இருக்கிறார்கள்.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

முன்னதாக அயலான் பற்றி தயாரிப்பு நிறுவனமான கேஜேஆர் ஸ்டுடியோஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டதாவது,

சிவகார்த்திகேயன் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள ஆர். ரவிகுமார் இயக்கத்தில், ஏ.ஆர். ரஹ்மான் இசையில், எங்களின் பிரம்மாண்ட படைப்பு அயலான் பற்றிய புதிய அறிவிப்பை வெளியிடுவதில் நாங்கள் பெரும் மகிழ்ச்சியடைகிறோம்.

இந்த திரைப்படத்தை இடைவிடாத கடின உழைப்பை செலுத்தி படமாக்கியுள்ளோம். மேலும் பல தடைகளை தாண்டி, நாளை ஏப்ரல் 24, 2023 காலை 11.04 மணிக்கு அயலான் அறிவிப்பை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

அயலான் திரைப்படத்தின் தரத்தில் சமரசம் செய்ய விரும்பாத நாங்கள், படத்தின் சிஜிஐ காட்சிகளுக்கு பெரும் மெனக்கெடலுடன் பணி புரிந்துள்ளோம். அயலான், ஒரு பான் இந்தியன் திரைப்படத்திற்கு அதிக எண்ணிக்கையிலான சிஜிஐ காட்சிகளைக் கொண்டிருக்கும் திரைப்படமாக உருவாகியுள்ளது.

திரைப்படம் கச்சிதமாக முழுமையடைய எங்களுக்கு போதிய நேரம் தேவைப்பட்டது. திரைப்படம் முழுவதும் வரும் வேற்றுகிரகவாசி கதாபாத்திரம் அனைவரும் விரும்பும் வகையில் காட்சிபடுத்தப்பட்டுள்ளது. மேலும், 4500+ விஎஃப்எக்ஸ் காட்சிகளைக் கொண்ட இந்திய சினிமாவின் முதல் முழு நீள லைவ்-ஆக்ஷன் திரைப்படமாக அயலான் இருக்கும் என்பதை உங்களுக்குத் தெரிவிப்பதில் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

Ponniyin Selvan 2: பாகுபலி வரலைனா பொன்னியின் செல்வன் வந்திருக்காது: மணிரத்னம்

இந்த நேரத்தில், பல ஹாலிவுட் திரைப்படங்களின் CG-க்குப் பின்னால் உள்ள Phantom FX நிறுவனத்திற்கு அவர்களது அளப்பரிய சிஜி பணிக்காக நன்றியையும் தெரிவிக்க விரும்புகிறோம்.

உங்களது பொறுமை மற்றும் இடைவிடாத ஆதரவிற்காக அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். உங்களுக்கு எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் திரைப்படமாக அயலான் இருக்கும் என்று நாங்கள் உறுதியளிக்கிறோம்.

அயலான் மூலம் கற்பனைக்கு அப்பாற்பட்ட, அதிசயங்கள் நிறைந்த புதிய உலகத்திற்கு செல்ல தயாராகுங்கள் என அதில் தெரிவிக்கப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.