சென்னை: சரவணா ஸ்டோர்ஸ் புகழ் அண்ணாச்சி தி லெஜெண்ட் திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.
ஜேடி-ஜெர்ரி இயக்கிய ‘தி லெஜண்ட்’ திரையரங்குகளைத் தொடர்ந்து ஹாட்ஸாட் ஓடிடியில் ஸ்ட்ரீமாகி வருகிறது.
இதனைத் தொடர்ந்து லெஜண்ட் சரவணன் நடிக்கும் புதிய படம் பற்றிய அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், லெஜண்ட் சரவணன் ரோல்ஸ் ராய்ஸ் காரில் கெத்தாக வரும் வீடியோவும், அவரது புதிய புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன.
ரோல்ஸ் ராய்ஸ் காரில் லெஜண்ட் சரவணன்
சரவணா ஸ்டோர்ஸ் மூலம் பிரபலமானவர் லெஜண்ட் அண்ணாச்சி. தனது கடை விளம்பரங்களில் ஆட்டம் போட்ட லெஜண்ட் அண்ணாச்சி, தற்போது லெஜண்ட் சரவணன் என்ற பெயரில் ஹீரோவாக கலக்கி வருகிறார். அவரே சொந்தமாக தயாரித்த தி லெஜண்ட் படம் மூலம் ஹீரோவான லெஜண்ட் சரவணன், தனது அடுத்தப் படம் குறித்தும் தீவிர ஆலோசனையில் உள்ளார்.
இந்நிலையில், தனது புதிய லுக்கில் கெத்தான ஒரு வீடியோ வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார் லெஜண்ட் சரவணன். ஒரு திருமண நிகழ்ச்சிக்கு தனது ரோல்ஸ் ராய்ஸ் காரில் சென்றுள்ள லெஜண்ட் சரவணன், புதிய லுக்கிலும் மிரட்டலாக மாஸ் காட்டுகிறார். அதே ஸ்டைலில் மணமக்களை வாழ்த்தியுள்ள லெஜண்ட் சரவணன், அவர்களுடனும் கலர்ஃபுல்லாக போட்டோஸ் எடுத்துள்ளார்.

பிரன்ச் பியர்டு ஸ்டைலில் லேசான தாடி, கோர்ட், சார்ட், டை கட்டிக் கொண்டு ரோல்ஸ் ராய்ஸ் காரில் இருந்து இறங்கும் லெஜண்ட் சரவணன், திருமண மண்டபத்தில் ராஜநடை போட்டு ரவுண்டு வருகிறார். புது மணமக்களை வாழ்த்திய தருணம் என்ற கேப்ஷனில் தனது டிவிட்டரில் இந்த போட்டோஸை ஷேர் செய்துள்ளார் லெஜண்ட் சரவணன். தி லெஜண்ட் படத்தில் நடித்த கெட்டப்பிற்கும் தற்போதைய லுக்கிற்கும் நிறையவே வித்தியாசம் உள்ளது. லெஜண்ட் சரவணின் புதிய போட்டோஸ் பார்த்த ரசிகர்கள் அதனை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
தி லெஜண்ட் வெளியான பின்னர் அடிக்கடி தனது புதிய லுக்குடன் போட்டோ வெளியிட்டு வரும் லெஜண்ட் சரவணன், ரசிகர்களை எப்போதுமே வைப்பில் வைத்துள்ளார். கடந்தாண்டு ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியான தி லெஜண்ட், ஹாட்ஸ்டாரில் வெளியானது. தியேட்டர் ரசிகர்களிடம் பெரிதாக ரீச் ஆகாத தி லெஜண்ட், ஓடிடி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

சில வாரங்களுக்கு முன்னர் மஞ்சள் நிற கோர்ட், சூட், அதற்கு மேட்சிங்காக கறுப்பு சட்டை, கூலர்ஸ் என செம்ம ஸ்மார்ட்டாக போட்டோ ஷூட் நடத்தியிருந்தார் அண்ணாச்சி. அப்போதும் லெஜண்ட் சரவணின் போட்டோஸ் டிவிட்டரில் ட்ரெண்டானது குறிப்பிடத்தக்கது. அதற்கும் முன்பு காஷ்மீர் சென்றிருந்த லெஜண்ட் சரவணன், லியோ படத்தில் விஜய்யுடன் நடிப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால், அதுகுறித்து லியோ படக்குழுவினர் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.