இந்தியாவில் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா தொற்று சற்று குறைந்து காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்தை தாண்டிய தினசரி கொரோனா பாதிப்பு கடந்த இரண்டு நாட்களாக படிப்படியாக குறைந்து வருகிறது. அதேபோன்று தமிழகத்திலும் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த சில நாட்களாக 500 பேருக்கு மேல் தினசரி கொரோனா தொற்று பதிவான நிலையில் நேற்று தமிழ்நாட்டில் 491 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தை பொருத்தவரை 470 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வந்த 525 பேர் இன்று குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழப்பு எண்ணிக்கை பூஜ்ஜியமாக பதிவாகியுள்ளது. அதன்படி இன்று தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3,585 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.