''நான் வெளியேறினால் திமுகவுக்கு ஆபத்து''.. அதே குரல்..அடுத்த ஆடியோ.! அண்ணாமலை வெளியீடு

தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திமுக அரசின் ஊழல் குறித்து பேசியதான ஆடியோ ஒன்றை அண்மையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். அதில், உதயநிதி ஸ்டாலினும், சபரீசனும் அவர்களது முன்னோர்கள்கூட சம்பாதிக்காத தொகையை ஒரே ஆண்டில் சம்பாதித்துள்ளனர். அந்த பணத்தை எப்படி வைத்திருப்பது என்பதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. 10 கோடி 20 கோடின்னு சுமார் 30 ஆயிரம் கோடியை சம்பாதித்துள்ளனர் என்று புலம்பும் விதமாக பதிவாகிய இருந்தது.

இந்த ஆடியோவுக்கு உடனே விளக்கம் அளிக்காமல் இருந்த அமைச்சர் பிடிஆர் பின்னர் ” அந்த ஆடியோ புனையப்பட்டது என்றும் இதுபோல இன்னும் பல ஆடியோக்கள் வரும் என்றும் கூறியிருந்தார். அதற்கு எதிர்வினையாற்றியவர்கள், நிறைய ஆடியோக்கள் வரும் என்று நீங்களே சொன்னால் மிச்சம் மீதி ஆடியோ இருக்கிறது என்றுதானே அர்த்தம்” என்று கூறியிருந்தனர். அந்த வகையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிடிஆர் பேசும் இரண்டாவது ஆடியோ என குறிப்பிட்டு மற்றொரு ஆடியோவை வெளியிட்டுள்ளார்.

தமிழில் மொழிபெயர்ப்பு செய்து அண்ணாமலை வெளியிட்டுள்ள ஆடியோ

அதில், ஒரு நபர் ஒரு பதிவு என்ற கொள்கைக்கு நான் அரசியலுக்கு வந்த முதல் நாளிலிருந்தே ஆதரவு அளித்து வருகிறேன் எனக்கு பாஜகவிடம் பிடித்த விஷயம் இதுதான். கட்சியையும் மக்களையும் பாத்துக்கொள்ளும் பொறுப்பு பிரிந்துதானே இருக்க வேண்டும். ஆனால், இங்கு எல்லா முடிவுகளையும் எம்.எல்.ஏகளும் அமைச்சர்களும்தான் எடுக்கின்றனர்.

இதெல்லாம் ஒரு அமைப்பா? அவர்களுக்கு வரும் ஊழல் பணம் அனைத்தையும் அவர்கள் எடுத்துக்கொள்கிறார்கள்.. நிதி மேலாண்மை செய்வது சுலபம். இங்கு கட்சியே முதல்வரின் மகனும், மருமகனும்தான். அவர்களை நிதி மேலாண்மை செய்ய சொல்லுங்கள்… அதனால் 8 மாதங்கள் பார்த்த பிறகு முடிவு செய்துவிட்டேன்.. இது ஒரு நிலையான முறையே கிடையாது.

எனக்கு இருக்கும் மிகப்பெரிய வசதி என்னவென்றால் இப்போது நான் பதவியில் இருந்து விலகினால், இந்த குறுகிய காலத்தில் வெளியே சென்றால் அவர்கள் செய்தது அனைத்தும் எதிர் வினையாக அவர்களுக்கே திருப்பி அடிக்கும். நான் இந்த யுத்தத்தை பாதியிலேயே கைவிட்டதாக எனது மனசாட்சி சொல்லாது என கருதுகிறேன். அதேபோல, நான் அந்த பதவியில் இல்லாதபோது அதை பற்றி கவலைப்பட வேண்டிய கவலை எனக்கு இல்லை” என்று அமைச்சர் பிடிஆர் அந்த ஆடியோவில் பேசியதாக பதிவாகியுள்ளது. இது

வட்டாரத்தில் பரபரப்பை கூட்டியுள்ளது.

இந்நிலையில், இதற்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் எதிர்வினையாற்றாமல் இருந்தால் ஆச்சரியமில்லை. காரணம், இனி நிறைய ஆடியோ வரலாம் ஆனால் நான் அதை கடந்து செல்ல போகிறேன், புகார் எதுவும் கொடுக்க விரும்பவில்லை என்று ஏற்கனவே பிடிஆர் கூறிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.