Ponniyin Selvan 2: திடீரென மேடையிலிருந்து எகிறி குதித்த ஜெயம் ரவி: வைரலாகும் ஷாக்கிங் வீடியோ.!

‘பொன்னியின் செல்வன்’ இரண்டாம் பாகத்தின் ரிலீசுக்கான பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. இதன் புரமோஷனுக்காக படக்குழுவினர் பம்பரமாய் சுற்றி வருகின்றனர். தினமும் ஏதாவது அப்டேட் அல்லது புரமோஷன் என மாஸ் காட்டி வருகிறது படக்குழு. இந்நிலையில் ‘பொன்னியின் செல்வன்’ புரமோஷனில் ஜெயம் ரவி செய்துள்ள காரியம் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை அதே பெயரில் படமாக்கியுள்ளார் மணிரத்னம். இதனை செய்ய பலர் விரும்பினாலும் சாத்தியமாக்கியது என்னவோ மணிரத்னம் தான். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான ரஜினி, கமல் உள்ளிட்ட பலரும் ‘பொன்னியின் செல்வன்’ கதாபாத்திரங்களில் நடிக்க ஆசைப்பட்டுள்ளனர். இறுதியில் மல்டி ஸ்டார் படமாக ‘பொன்னியின் செல்வன்’ நாவலை படமாக்கினார் மணிரத்னம்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

கடந்த வருடம் இதன் முதல் பாகம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோகமான வரவேற்பினை பெற்றது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் ‘பொன்னியின் செல்வன்’ படம் வெளியாகி வசூலில் மாஸ் காட்டியது. இந்தப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, பிரபு, லால், சரத்குமார், பார்த்திபன், பிராகாஷ் ராஜ், சோபிதா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்களே நடித்திருந்தனர்.

லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்தப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். முதல் பாகத்தின் படப்பிடிப்பின் போதே இரண்டாம் பாகத்திற்கான பல காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டதால் இரண்டாம் பாகத்தை விரைந்து ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்தது. அதன்படி வரும் 28 ஆம் தேதி வெளியாகவுள்ள ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் புரமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

Ayaalaan: எதிர்பார்ப்பை எகிற செய்யும் ‘அயலான்’: வெளியான வெறித்தனமான வீடியோ.!

முன்னதாக சென்னை, ஐதராபாத், கொச்சி, மும்பை உள்ளிட்ட பகுதிகளில் புரமோஷன் பணிகள் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துக்கொண்டனர். இதனையடுத்து நேற்றைய தினம் பெங்களூரில் புரமோஷன் நிகழ்ச்சி நடந்த போது ஜெயம் ரவி உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கினார். உடனே அருகிலிருந்த விக்ரம், கார்த்தி, திரிஷா ஆகியோர் அவரை கட்டிப்பிடித்து ஆசுவாசப்படுத்தினர்.

Sarath Babu: நடிகர் சரத்பாபுவுக்கு ஆச்சு.? மருத்துவமனையில் அனுமதி: கவலையில் ரசிகர்கள்.!

அப்போது மேடைக்கு கீழே இருந் ஜெயம் ரவி ரசிகைகள் அவர் எமோஷனல் ஆனதால் ஆறுதல் சொல்ல வேண்டும் என அழைத்தனர். உடனே ஜெயம் ரவி மேடையிலிருந்து எகிறி குதித்து கீழே சென்றார். அவரை ரசிகைகள் கட்டிப்பிடித்து ஆசுவாசப்படுத்தினார்கள். இந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் ஜெயம் ரவி மேடையிலிருந்து குதித்துள்ளதை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.