Ponniyin Selvan 2: பொன்னியின் செல்வன் 2 படத்தில் யாருக்கு அதிக சம்பளம்னு தெரியுமோ?

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
Ponniyin Selvan 2 stars salary: பொன்னியின் செல்வன் 2 பட கலைஞர்களில் யாருக்கு அதிக சம்பளம் கொடுக்கப்பட்டது என்பது தெரிய வந்திருக்கிறது.

​பொன்னியின் செல்வன் 2​மணிரத்னம் இயக்கத்தில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர் ராய், சரத்குமார் உள்ளிட்டோர் நடித்திருக்கும் பொன்னியின் செல்வன் 2 படத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏப்ரல் 28ம் தேதியே படத்தை பார்த்துவிட பலர் திட்டமிட்டிருக்கிறார்கள். முதல் நாள் முதல் காட்சியை பார்க்க ஒரு பெரிய கூட்டமே இருக்கிறது.
​த்ரிஷா​பொன்னியின் செல்வன் 2 படத்தில் குந்தவையாக நடிக்க த்ரிஷாவுக்கு ரூ. 3 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. முக்கிய கதாபாத்திரமான த்ரிஷாவுக்கே இவ்வளவு தான் சம்பளமா என ரசிகர்கள் வியந்தார்கள். பொன்னியின் செல்வன் 2 படத்தில் யாருக்கு தான் அதிக சம்பளம் கொடுக்கப்பட்டது என ரசிகர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

​Ponniyin Selvan 2: தெரியாமல் இடித்த ஐஸ்வர்யா ராய்: குஷியில் ஜெயம் ரவி என்ன செய்தார் தெரியுமா?

​விக்ரம்​பொன்னியின் செல்வன் 2 படத்தில் ஆதித்த கரிகாலனாக வாழ்ந்திருக்கும் சீயான் விக்ரமுக்கு தான் அதிக சம்பளமாம். அவருக்கு ரூ. 12 கோடி சம்பளம் கொடுத்திருக்கிறார்களாம். இத்தனை ஆண்டுகளாக திரையுலகில் இருக்கிறார். நல்ல நடிகன், அர்ப்பணிப்புக்கு பெயர் போனவர். அவருக்கே வெறும் ரூ. 12 கோடி தானா? . என்ன மணிரத்னம் சார் இதெல்லாம் என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

​சீயான்​பா. ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்திற்காக முடி வளர்த்தார் விக்ரம். அதனால் அதே ஹேர்ஸ்டைலில் தான் பொன்னியின் செல்வன் 2 பட விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். கொண்டை, கோட் சூட் என சூப்பர் ஸ்டைலிஷாக வருகிறார் விக்ரம். பொன்னியின் செல்வன் 2 டூர் பற்றிய புகைப்படங்கள், வீடியோக்களை தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார் சீயான்.
​மணிரத்னம்​மணிரத்னம் பற்றி விக்ரம் கூறியதாவது, கென்னி உன்னை வைத்து 100 படங்கள் பண்ண விரும்புகிறேன் என ராவணன் படத்திற்கு பிறகு மணி சார் என்னிடம் சொன்னார். 100 படங்களுக்கு ரொம்ப காலம் ஆகும். அதனால் தயவு செய்து விரைவில் இரண்டாவது படத்தை கொடுங்க சார் என்றேன். தற்போது அவர் இயக்கத்தில் இரண்டாவது படத்தில் நடித்தது சந்தோஷமாக இருக்கிறது என்றார்.
​ஆதித்த கரிகாலன்​விக்ரம் மேலும் கூறியதாவது, ஆதித் கரிகாலன் ஒரு பெரிய போர் வீரன். பயமறியாதவர். மணிமுடி, ராஜ வாழ்க்கையை தூக்கி எறிந்துவிட்டு போருக்கு போவார். தன் காதலை மறக்க முயற்சி செய்வார். ஆனால் இறுதியில் காதலிக்காக எதையும் செய்ய விரும்புவார். ராவணன் படத்தில் நான் வெளிப்படுத்தியே அதே எமோஷன் தான். ஆனால் பொன்னியின் செல்வன் 2 படத்தில் என் கதாபாத்திரம் வந்திருக்கும் விதம் மக்களுக்கு பிடிக்கும் என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.