டேராடூன், இந்தியா – சீன எல்லையில் உத்தரகண்டில் அமைந்துள்ள மனா என்ற கிராமத்தின் நுழைவு வாயிலில், முதல் இந்திய கிராமம் என்ற பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.
உத்தரகண்டில், முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
இங்குள்ள சமோலி மாவட்டத்துக்கு கடந்த ஆண்டு அக்., மாதம் பிரதமர் மோடி சென்றபோது, ‘எல்லையில் அமைந்துள்ள கிராமங்களை நாட்டின் கடைசி கிராமங்கள் என்று அழைப்பது வழக்கம். ஆனால், அவை தான் நாட்டின் முதல் கிராமங்கள்’ என, தெரிவித்தார்.
இந்நிலையில், உத்தரகண்டில் இந்தியா – சீன எல்லையில் அமைந்துள்ள மனா கிராமத்தின் நுழை வாயிலில், பி.ஆர்.ஓ., எனப்படும் எல்லை சாலைகள் அமைப்பு, பிரமாண்ட பெயர்ப் பலகையை வைத்துள்ளது.
அதில், ‘முதல் இந்திய கிராமம் – மனா’ என, குறிப்பிட்டுள்ளது.
‘ மனா இனி நாட்டின் கடைசி கிராமம் அல்ல, நாட்டின் முதல் கிராமம்’ என, முதல்வர் புஷ்கர் சிங் தாமி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement