திருச்சியில் நடைபெற்ற ஓபிஎஸ் மாநாட்டில் பங்கேற்று சொந்த ஊர் திரும்பிய ஓபிஎஸ் ஆதரவாளர்களின் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி ஜி கார்னர் ரயில்வே மைதானத்தில் நேற்று மாலை ஓ பன்னீர்செல்வத்தின் மாநாடு நடைபெற்றது. இந்த தர்மயுத்த மாநாட்டில் ஓபிஎஸ்-ன் பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர் கலந்து கொண்டனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரின் ஆதரவாளர்களும் கடுமையாக விமர்சனங்களை முன்வைத்து மாநாட்டில் உரையாற்றினார்.
மேலும், ஆளும் திமுக, சசிகலா, டிடிவி தினகரன் பற்றி இந்த மாநாட்டில் எந்த குற்றச்சாட்டுகளையும் முன்வைக்கவில்லை. மாநாட்டில் சுமார் 20 ஆயிரம் பேர் கலந்து கொண்டு இருப்பார்கள்.
இந்நிலையில், ஓபிஎஸ் மாநாட்டில் பங்கேற்று தூத்துக்குடி திரும்பிய ஓபிஎஸ் ஆதரவாளர்களின் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஓபிஎஸ் தரப்பின் ஸ்ரீவைகுண்டம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெயமுருகன் உள்பட 17 பேர் காயமடைந்தனர்.
விபத்தில் காயமடைந்தவர்களை பொதுமக்களும் போலீசாரும் மீட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைகள் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
மேலும், விபத்து குறித்து மேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.