அகாலி தளம் கட்சியின் மூத்த தலைவரும் பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான பிரகாஷ் சிங் பாதல் காலமானார். இவருக்கு வயது 95
இவருக்கு சில நாட்களாக மூச்சுத்திணறலால் அவதிப்பட்டு வந்ததால் அவரை ஒரு வாரத்திற்கு முன்னர் மொகாலியில் உள்ள போர்டிஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக சேர்க்கப்பட்டார்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அவரது மறைவையொட்டி 2 நாள் தேசிய துக்க தினம் கடைப்பிடிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்து உள்ளது.