பாலக்காடு,:கேரள மாநிலத்தில், ரயிலில் தீ வைத்த சம்பவத்தில், முக்கிய குற்றவாளியுடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்த பட்டியலை தயாரித்து, என்.ஐ.ஏ., விசாரணையை துவக்கியுள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம், எலத்துார் ரயில்வே ஸ்டேஷன் அருகே, ஆலப்புழா- – கண்ணுார் பயணியர் ரயிலில், கடந்த 2ம் தேதி பயணியர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியது.
இதில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான, புதுடில்லி ஷாஹின்பாகைச் சேர்ந்த ஷாருக் சைபி, 24, என்பவரை, மூன்று நாட்களுக்குப் பின் மஹாராஷ்டிராவில் அம்மாநில போலீசார் கைது செய்தனர்.
அவரை, கேரள போலீசார் அழைத்து வந்து விசாரித்த நிலையில், இவ்வழக்கு, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பின் விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து, ஷாருக் சைபியுடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்து பட்டியல் தயாரித்து, என்.ஐ.ஏ., விசாரணையை துவங்கி உள்ளது.
ரயிலில் தீ வைத்த சம்பவத்துக்கு இரு நாட்களுக்கு முன்பே, ஆலப்புழா, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு மாவட்டங்களில், ஷாரூக் சைபி மொபைல்போன் பயன்படுத்தியதற்கான ஆவணங்கள் உறுதி செய்யப்பட்டு, விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
ஷாருக் சைபிக்கு உதவியவர்களும் ரயிலில் பயணித்தனரா? என்பது குறித்து விசாரிக்கப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement