எம்.எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2023 போட்டியில் 18 சிக்ஸர்களை விளாசியது, இது டி20 லீக் வரலாற்றில் ஒரு அணியின் 4வது அதிகபட்ச எண்ணிக்கையாகும். எந்த அணி ஐபிஎல் போட்டியில் அதிக சிக்ஸர்களை அடித்துள்ளது என்பது தெரியுமா?
சென்னை சூப்பர் கிங்ஸ் – 18 சிக்சர்கள்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக ஐபிஎல் 2023 சீசனின் 33வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பல சாதனைகளை படைத்துள்ளது. அதில் ஒன்று நேற்று (2023 ஏப்ரல் 23 ஞாயிற்றுக்கிழமை) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 18 சிக்ஸர்கள் அடித்தது ஆகும்.
இதற்கு முன் ஒரு போட்டியில் 18 சிக்ஸர்கள் அடித்த RCB மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸின் சாதனையை சென்னை சூப்பர் கிங்ஸ் சமன் செய்தது. அஜிங்க்யா ரஹானே மற்றும் ஷிவம் துபே ஆகியோர் தலா 5 சிக்சர்களை அடித்தனர்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – 21 சிக்சர்கள்
ஐபிஎல் 2013 இல் புனே வாரியர்ஸ் இந்தியாவுக்கு எதிராக 21 சிக்ஸர்களை அடித்து ஐபிஎல் போட்டியில் அதிகபட்ச சிக்ஸர்களை அடித்த சாதனையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் கொண்டுள்ளது. இந்தப் போட்டியில் கிறிஸ் கெய்ல் ஆட்டமிழக்காமல் 175 ரன்கள் எடுத்தார்.
டெல்லி டேர்டெவில்ஸ் – 20 சிக்ஸர்கள்
டெல்லி டேர்டெவில்ஸ் (தற்போது டெல்லி கேபிடல்ஸ்) ஐபிஎல் 2017 போட்டியில் குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிராக 20 சிக்ஸர்களை அடித்தது. ரிஷப் பந்த் தனது 97 ரன்களில் ஒன்பது சிக்ஸர்களை அடித்தார்.