சூடானில் 3,500 இந்தியர்கள் தவிப்பு: வெளியுறவு அமைச்சகம் தகவல்| 3,500 Indians stranded in Sudan: Ministry of External Affairs informs

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: சூடானில் 3,500 இந்தியர்கள் மற்றும் 1000 இந்திய வம்சாவளியினர் இருப்பார்கள் என தெரியவந்துள்ளதாக வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

இது தொடர்பாக மத்திய வெளியுறவு செயலாளர் விஜய் மோகன் கூறியதாவது: சூடானில் கலவரம் துவங்கிய ஏப்.,15ல் இருந்து அங்கு நிலவும் சூழ்நிலையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். அங்கு 3,500 இந்தியர்களும், 1,000 இந்திய வம்சாவளியினர் இருப்பார்கள் என கணித்துள்ளோம். அங்குள்ள இந்தியர்களை மீட்க, கடற்படைக்கு சொந்தமான ஐஎன்எஸ் தர்காஷ் என்ற போர்க்கப்பல் அங்கு செல்கிறது. இது 3வது போர்க்கப்பல் ஆகும். சூடானில் தவிக்கும் மற்ற நாட்டவர்களையும் மீட்க வேண்டும் என்ற கோரிக்கையும் வந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

1,100 பேர் மீட்பு

latest tamil news

இதனிடையே, வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளீதரன் வெளியிட்ட அறிக்கையில், சூடான் விமான நிலையத்தில் இருந்து 246 இந்தியர்களுடன் விமானப்படை விமானம் கிளம்பி உள்ளது. கடற்படைக்கு சொந்தமான கப்பல் மூலம் 297 இந்தியர்களுடன் சூடான் துறைமுகத்தில் இருந்து கிளம்பி, சவுதி அரேபியாவின் ஜெட்டா வந்தடைந்துள்ளது. இதுவரை 1,100 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.