இன்னும் 7 ஆண்டுகளில் நானோ ரோபோ உதவியுடன் மனிதர்கள் சாகா வரம் பெறுவர் – கூகுள் முன்னாள் விஞ்ஞானி கணிப்பு

புதுடெல்லி: இன்னும் 7 ஆண்டுகளில் நானோ ரோபோ உதவியுடன் மனிதர்கள் சாகா வரம் பெறுவர் என கூகுள் நிறுவன முன்னாள் விஞ்ஞானி ரே குர்ஸ்வேல் கூறியுள்ளார். கூகுள் நிறுவனத்தின் முன்னாள் விஞ்ஞானி ரே குர்ஸ்வேல்(75). கம்ப்யூட்டர் இன்ஜினீயரான இவர், இதுவரை 147 முன் கணிப்புகளை கூறியுள்ளார். இவற்றில் 86 சதவீதம் சரியாக இருந்துள்ளது. 2000-ம் ஆண்டுக்குள் செஸ் போட்டியில் மனிதர்களை, கம்ப்யூட்டர் வெல்லும் என இவர் கடந்த 1990-ம் ஆண்டே கூறினார். அது சரியாக இருந்தது. அதேபோல் … Read more

உருமாறிய புதிய வகை கொரோனா பரவல் : மக்கள் முகக்கவசம் அணிய மருத்துவர்கள் எச்சரிக்கை

கோவிட் பரவல் படிப்படியாக அதிகரித்து வருவதால் மக்கள் வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தி உள்ளனர். புதிய உருமாறிய கோவிட் XBB.1.16 மிதமான பாதிப்பையே கொண்டுள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். கோவிட் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமென குர்கானில் உள்ள மெதாந்தா மருத்துவமனையின் தலைவரான டாக்டர் அரவிந்த் குமார் வலியுறுத்தியுள்ளார். பரிசோதனைகள் அதிகரித்துள்ளதால் பாதிப்புகளும் அதிகளவில் தெரிய வருவதாகக் கூறிய அவர், பாதிப்புகள் தீவிரம் குறைந்தவையாக காணப்படுவதாகக் குறிப்பிட்டார். … Read more

இந்திய பெண்… கனடா – அமெரிக்க எல்லையில் சடலமாக மீட்கப்பட்ட புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

கனடா – அமெரிக்க எல்லையில் சடலமாக மீட்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8 என அதிகரித்துள்ளதாகவும், ஒரு பச்சிளம் குழந்தை உட்பட இருவரின் சடலம் புதிதாக மீட்கப்பட்டுள்ளதாவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். ருமேனிய மற்றும் இந்திய வம்சாவளி வியாழன் அன்று ஐந்து பெரியவர்கள் மற்றும் ஒரு குழந்தையின் உடல்களை கண்டுபிடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். ருமேனிய மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு குடும்பங்களின் உறுப்பினர்கள் இவர்கள் எனவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்திருந்தது. @AP மேலும், வெள்ளிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்ட குழந்தை கனேடிய குடிமகன் … Read more

போரூர் சுங்கச்சாவடியில் ஓராண்டாக 10 சக்கர லாரிக்கு கூடுதலாக கட்டணம் வசூலிப்பு: நடவடிக்கை எடுக்க கோரி புகார்

பூந்தமல்லி: போரூர் சுங்கச்சாவடியில் ஓராண்டாக, 10 சக்கர லாரிக்கு கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, நடவடிக்கை எடுக்க கோரி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போரூர் அடுத்த கொளப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ராமதுரை(49). இவர் மதுரவாயல் காவல்  நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், போரூர் சுங்கச்சாவடியில் 10 சக்கரம் கொண்ட தன்னுடைய இரண்டு லாரிகளுக்கு 16 சக்கர வாகனங்களுக்கு உண்டான கட்டணம் வசூல் செய்து விட்டனர். கடந்த ஓராண்டில் சுமார் இரண்டு லட்சம் வரை முறைகேடாக ”பாஸ்ட்டேக்” … Read more

ஏப்-01: இன்று பெட்ரோல் ரூ.102.63, டீசல் ரூ.94.24 க்கு விற்பனை

சென்னை:  சென்னையில் 315-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

2030ம் ஆண்டிற்குள் 2 டிரில்லியன் டாலர் ஏற்றுமதி இலக்கு: புதிய வெளிநாட்டு வர்த்தக கொள்கை வெளியீடு

புதுடெல்லி: வரும் 2030ம் ஆண்டிற்குள் 2 டிரில்லியன் டாலர் ஏற்றுமதியை எட்டுவதை இலக்காக கொண்டு புதிய வெளிநாட்டு வர்த்தக கொள்கையை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சேவைகளை மேம்படுத்துவதன் மூலம் சர்வதேச வர்த்தகத்தில் இந்தியாவின் பங்களிப்பை அதிகரிப்பதற்காக ஒவ்வொரு 5 ஆண்டிற்கும் வெளிநாட்டு வர்த்தக கொள்கையை   ஒன்றிய அரசு வெளியிட்டு வருகிறது. கடந்த 2015ல் வகுக்கப்பட்ட 5 ஆண்டு கொள்கை,  கடந்த ஆண்டு செப்டம்பரில், 2023 மார்ச் 31 வரை நீட்டிப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், … Read more

விலங்குகளுக்கு சட்ட உரிமை மனு தள்ளுபடி| Petition for legal rights to animals waived

புதுடில்லி மனிதர்களை போலவே அனைத்து விலங்குகளுக்கும் சட்ட உரிமை உள்ளதாக அறிவிக்க கோரிய மனுவை, உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. இது தொடர்பாக தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது: விலங்குகள் மீதான வன்கொடுமை நிகழ்வுகள் மிக தாமதமாக தான் வெளிச்சத்திற்கு வருகின்றன. விலங்குகளைப் பாதுகாக்க, தற்போதுள்ள சட்டங்கள் போதுமானதாக இல்லை என எண்ணத் தோன்றுகிறது. எனவே, மனிதர்களை போலவே, விலங்குகளுக்கும் சட்ட உரிமை உள்ளதாக … Read more

எனக்கு மரணமும் நிகழலாம் – பாலா உருக்கம்

இயக்குனர் சிவாவின் தம்பி, நடிகர் பாலா. ‛அன்பு, காதல் கிசு கிசு' என ஆரம்பகாலங்களில் ஓரிரு படங்களில் ஹீரோவாக நடித்தார். பின்னர் அஜித்தின் வீரம் படத்தில் நடித்து பிரபலமானார். மலையாளத்தில் அதிக படங்களில் நடித்து வந்த இவர் சமீபத்தில் கல்லீரல் பிரச்னை காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். இந்நிலையில் தனது மனைவியுடன் திருமணநாளை கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தார் பாலா. அந்த வீடியோவை பகிர்ந்து, ‛‛அனைவரின் பிரார்த்தனையாலும் குணமாகி வருகிறேன். அடுத்த சில தினங்களில் எனக்கு … Read more

'ஆதி புருஷ்' படம் Promotion-ஐ தொடங்கிய படக் குழு

தயாரிப்பாளர் பூஷன் குமார்- இயக்குநர் ஓம் ராவத் ஆகியோர் கூட்டணியில் தயாராகியிருக்கும் ‘ஆதி புருஷ்’ எனும் திரைப்படத்தின் பிரச்சாரத்தை, மங்களகரமான மாதா வைஷ்ணவி தேவியை தரிசித்த பிறகு படக்குழுவினர் தொடங்கி இருக்கின்றனர். பாலிவுட் இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் ‘ஆதி புருஷ்’.‌ இதில் பிரபாஸ், கிருத்தி சனோன், ஸன்னி சிங், சயீஃப் அலி கான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்திய வரலாற்றின் பண்பாட்டுக் காவியமான இராமாயணத்தை புதிய கோணத்தில் புதுப்பித்திருக்கும் இந்த திரைப்படம் … Read more

தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் மழை – வானிலை ஆய்வு மையம்.!

தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி, இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, … Read more