வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஷாப்பிங் மாலில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் குழந்தை உட்பட 9 பேர் பலியாகினர். 7 பேர் படுகாயமுற்றனர். கையில் துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர் கூட்டத்தினரை நோக்கி சரமாரியாக சுட்டுள்ளார். அவரையும் போலீசார் சுட்டு வீழ்த்தினர்.
இது தொடர்பாக டெக்சாஸ் போலீசார் கூறுகையில், டெக்சாஸ் நகரில் ஆலன் பகுதியில் ஆலன் ப்ரீமியம் அவுட்லெட்ஸ் என்ற வணிக வளாகம் உள்ளது. இங்கு வந்த மர்ம நபர் ஒருவர், திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார். அதில், குழந்தை உள்ளிட்ட 9 பேர் பலியாகினர். 7 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவித்தனர். காயமடைந்தவர்களில் 5 முதல் 61 வயது வரை உள்ளவர்களும் அடக்கம்.
டெக்சாஸ் கவர்னர் கிரெக் அபாட் கூறுகையில், துப்பாக்கிச்சூடு சம்பவம் வார்த்தைகளால் விவரிக்க முடியாத துயர சம்பவம். போலீசாருக்கு அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளோம் எனக்கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement