Apple iphone 16 மற்றும் 15'இல் முக்கிய மாற்றங்கள் இடம்பெரும்! ஆப்பிள் அறிவிப்பு!

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
உலகம் முழுவதும் பலர் ஐபோன் 15 ஸ்மார்ட்போனிற்காக காத்திருக்கும் இந்த சமயத்தில் அடுத்த ஆண்டு வெளியாகப்போகும் ஐபோன் 16 ஸ்மார்ட்போனின் டிசைன் பற்றிய விவரங்கள் கசிந்துள்ளன.

இதன் டிஸ்பிளே மற்றும் டிசைன் அம்சங்கள் நாம் தற்போது பார்க்கும் ஐபோன் 13 மற்றும் 14 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் இருந்து முற்றிலும் மாறுபடுகின்றன. மேலும் இந்த ஆண்டு வெளியாகவுள்ள ஐபோன் 15 சீரிஸ் ஸ்மார்ட்போன்களும் இதுவரை இல்லாத அளவு மாற்றங்களை பெரும் என்று தெரிகிறது.

ஐபோன் 16

இந்த போனில் புது விதமான கேமரா டிசைன் இடம்பெறும். ஆனால்
ஐபோன் 13 மற்றும் 14 சீரிஸ்
போன்களில் இருப்பது போன்று கேமரா இல்லாமல் ஐபோன் 12 சீரிஸ் போன்களில் இருப்பது போன்ற அமைப்பு அதில் இருக்கும். இதில் புதிய வகை Dynamic Island டிசைன், முன்பக்க பஞ்ச் ஹோல் டிசைன், USB Type C போர்ட் வசதி போன்றவை இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபோன் 15

இந்த போனில் முதல் முறையாக லைட்னிங் சார்ஜ்ர் போர்ட் பதிலாக ஆண்ட்ராய்டு போன்களில் இருப்பது போன்ற USB Type C Port வசதி இருக்கும். இதன் முன்பக்கம் பஞ்ச் ஹோல் நோட்ச் டிசைன், புதிய
Apple Dynamic island
வசதி, மிகவும் குறைவான பேசல் அளவு, பெரிய ஸ்க்ரீன் அளவு எதிர்பார்க்கலாம்.

இதன் டாப் வேரியண்ட் போன்களான Apple iphone 15 Pro மற்றும் Pro Max மாடல்கள் முற்றிலும் டைட்டானியம் பிரேம், சாலிட் ஸ்டேட் பட்டன் டிசைன் வசதி, கூடுதலாக ஹாப்டிக் சென்சார் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.