LG OLED TV: புதிய பெண்ட் வகை ஸ்மார்ட் டிவி அறிமுகம்! அனைவரையும் கவர்ந்திழுக்கும் டிவிக்கள்!

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
இந்தியாவில் ஸ்மார்ட் டிவி விற்பனையில் பிரீமியம் நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் LG அதன் புதிய OLED வகை டிவிகளை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட் டிவி வரிசையில் புதியதாக Bend செய்யக்கூடிய OLED டிவி வெளியாகியுள்ளது. சுமார் 10டிகிரி வரை இந்த டிவி நாம் திருப்பமுடியும்.

​LG OLED FLEXஇந்த புதிய அறிமுகத்தில் முக்கியமான டிவி இந்த LG OLED FLEX (LX3) ஆகும். காரணம் இந்த டிவியை நாம் பெண்ட் செய்யலாம். இதில் ஒரு 2 இன்ச் பெண்ட் செய்யக்கூடிய OLED ஸ்க்ரீன் உள்ளது. மேலும் கேமிங் விளையாடவும், நேரடி ஒளிபரப்பு செய்யவும், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் பார்க்கவும் இது சிறந்த டிவியாக இருக்கும்.LG OLED TVஇதை நாம் பிளாட் அல்லது கர்வ் என எப்படிவேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இதை மொத்தமாக 20 அளவுகளில் பெண்ட் செய்யமுடியும். மேலும் 10 டிகிரி அளவு உட்புறமும் வெளிப்புறம் 5 டிகிரி அளவில் பெண்ட் செய்யலாம். இந்த டிவியில் LG OLED EVo டெக்னாலஜி உள்ளது. அதில் 100% வரை கலர் அளவு இருப்பதால் சிறந்த வீடியோ அனுபவம் கிடைக்கும்.​Gamers FLEX OLEDதினமும் மணிக்கணக்கில் கேமிங் விளையாட நினைப்பவர்களுக்கு தனியாக இந்த FLEX OLED அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதை நாம் 12 அளவுகளில் அடஜஸ்ட் செய்யவும், அதே நேரம் நேரடியாக விளையாடுவது போன்ற அனுபவம் கிடைக்க ஸ்க்ரீன் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.இதில் கூடுதலாக Game Optimizer வசதி இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் நாம் பல தனிப்பட்ட கேமிங் வசதிகளை பயன்படுத்தலாம். இதன் ஆடியோ தரமும் கணக்கில் எடுக்கப்பட்டு சிறந்த 40W Dolby Atmos வசதி உள்ள ஸ்பீக்கர் வழங்கப்பட்டுள்ளது.மேலும் HDMI 2.1 A போர்ட், கனெக்டெட் கேமிங் வசதி, G Sync, Free Sync, Multi View Mode, Refresh Rate ஆப்ஷன் என பல புதுமையான வசதிகள் இடம்பெற்றுள்ளது.OLED EVO சீரிஸ்இந்த டிவி நமது வீட்டின் முக்கிய அறையில் சுவரில் மாற்றுவதற்கு ஏதுவாக ‘One Wall Design’ கொண்டுள்ளது. இதில் பலவகையான ஸ்க்ரீன் அளவு உள்ளது. நமது வீட்டின் சுவர் அளவிற்கு ஏற்றவாறு நாம் இதை தேர்வு செய்யலாம்.​விலைஇந்த LG OLED டிவி விலை இந்தியாவில் 1,19,990 லட்சம் ரூபாய் முதல் தொடங்கி அதன் முழு Rollable TV 75 லட்சம் ரூபாய் வரை உள்ளது.
​செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.