மதிய உணவில் 8 அடி பாம்பு… அலறிய அரசு பள்ளி மாணவர்கள்.. 110 பேருக்கு சிகிச்சை

அராரியா மாவட்டத்தின் அமவுனா கிராமத்தில் அரசு உயர்நிலை பள்ளி இயங்கி வருகிறது. நடுநிலை பள்ளியாக இருந்த வந்த இப்படி அண்மையில்தான் உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கடந்த சனிக்கிழமை அன்று மாணவர்களுக்கு வழக்கம்போல மதிய உணவாக கிச்சடி வழங்கப்பட்டது. இந்த உணவை சுமார் 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.

மேலும் 98 மாணவர்கள் கிச்சடிக்காக வரிசையில் நின்று கொண்டிருந்தனர். அப்போது, பாத்திரத்தில் இருந்து கிச்சடியை அள்ளியபோது 8 அடியில் பாம்பு ஒன்று இறந்து கிடந்துள்ளது. இதை கண்டதும் அதிர்ந்துபோன மாணவர்கள் கத்தி கூச்சலிட்டனர். சாப்பிட்டுக்கொண்டிருந்த மாணவர்கள் பலர் வாந்தி எடுத்து மயங்கியுள்ளனர். உடனே மதிய உணவு நிறுத்தப்பட்டது. தகவல் அறிந்து வந்த மாணவர்களின் பெற்றோரும், கிராம மக்களும் பள்ளியில் குவிந்தனர்.

பின்னர் உடனடியாக 110 மாணவர்கள் ஃபோர்ப்ஸ்கஞ்ச் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்து வந்த மாவட்ட கல்வி அதிகாரிகள் மதிய உணவை ஆய்வு செய்தனர்.

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அதிகாரிகள் கூறுகையில், ‘ ஒரு தன்னார்வு தொண்டு நிறுவனம் தயாரித்த கிச்சடி மாணவர்களுக்கு பரிமாறப்பட்டது. அப்பத்து ஒரு தட்டில் 8 அடி பாம்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து பள்ளியில் தகவல் பரவியதும், உணவு வழங்குவது நிறுத்தப்பட்டது. மதிய உணவை சாப்பிட்ட மாணவர்கள் உடனடியாக ஃபோர்ப்ஸ்கஞ்ச் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அவர்கள் தீவிர மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். இந்த் விவாகரம் குறித்து மாவட்ட கல்வி அதிகாரி அடங்கிய குழு விசாரணையைத் தொடங்கியுள்ளது. தொண்டு நிறுவனத்தின் சமையலறை மற்றும் அங்கு பின்பற்றப்பட்ட சமையல் செயல்முறையை ஆய்வு செய்ய்ய்யப்பட்டுள்ளது. உணவில் இருந்த பாம்பின் வகை மற்றும் அது விஷமா என்பதை அறிய தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளோம். இதில் தவறு இருப்பது கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் கூறினர்.

பள்ளி மதிய உணவில் பல்லி, பூச்சிகள் கண்டெடுக்கப்பட்டு வரும் நிலையில் 8 அடி பாம்பு இருந்துள்ள சம்பவம் பிகாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.