ஹெராயின் போதை பொருளுடன் பாகிஸ்தானில் இருந்து ஊடுருவிய 2 டிரோன்களை சுட்டு வீழ்த்திய ”பிஎஸ்எப்” படையினர்…!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் போதை பொருளுடன் பாகிஸ்தானில் இருந்து ஊடுருவிய 2 டிரோன்கள் எல்லை பாதுகாப்புப் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டன.

குர்ட் மாவட்டம் தனோவா கிராமத்தில் இந்தியா-பாகிஸ்தான் எல்லையையொட்டிய பகுதியில் நேற்றிரவு ஆளில்லா டிரோன் பறப்பதை கண்டுபிடித்து எல்லை பாதுகாப்புப் படையினர் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர்.

இதில் நொறுங்கி விழுந்த டிரோனை  எடுக்க பாதுகாப்புப் படையினர் சென்றபோது, அங்கிருந்து 3 பேர் ஓடுவதை பார்த்து விரட்டிச் சென்று ஒருவனை மடக்கி பிடித்தனர்.

அவனிடம் இருந்து பல கோடி ரூபாய் மதிப்புடைய மூன்றரை கிலோ ஹெராயினை கைப்பற்றினர்.இதேபோல், மேலும் ஒரு டிரோனை சுட்டுவீழ்த்தி அதிலிருந்த சுமார் 2 கிலோ ஹெராயினை கைப்பற்றினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.