ஐபிஎல் இறுதிப்போட்டி மழையால் நிறுத்தப்பட்டால் கோப்பை குஜராத் அணிக்குத்தான்? – வெளியான காரணம்


குஜராத் மற்றும் சென்னை அணிக்கு இடையே இன்று நடக்க இருக்கும் இறுதிப்போட்டி மழையால் நின்றுபோனால் கோப்பை குஜராத் அணிக்குத்தான் கிடைக்கும் என்று தகவல் வெளியாகி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மழையால் நின்றுப்போன இறுதிப்போட்டி

நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் அகமதாபாத்தில் நேற்று இரவு இறுதிப்போட்டியில் நேருக்கு நேர் மோத இருந்தன. இந்த இறுதிப்போட்டியை காண்பதற்காக ரசிகர்கள் மைதானத்தில் மிகுந்த எதிர்பார்ப்பில் சூழ்ந்தனர்.

ஆனால், இடி மின்னலுடன் அகமதாபாத் மைதானத்தில் மழை கொட்டித் தீர்த்தது.

இதனால், மைதானத்திற்குள் இருந்த ரசிகர்களுக்கு சிரமம் ஏற்பட்டது. மழை தொடர்ந்து பெய்ததால் 7.30 மணிக்கு நடைபெற இருந்த ஆட்டம் தாமதமானது.

ipl-2023-dhoni-chennai-gujarat

இதனையடுத்து, இரவு 11 மணிக்கு இறுதிப்போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், மழை நீடித்ததால் இன்று போட்டி நடைபெறும் என்று தள்ளிவைக்கப்பட்டது. இதனால், மைதானத்திற்குள் வந்த ரசிகர்கள் இறுதிப்போட்டியை காண முடியாமல் ஏமாற்றத்துடன் சென்றனர்.

கோப்பை குஜராத் அணிக்கு செல்லும்

இந்நிலையில், இன்றும் மழை நீடித்து இறுதிப்போட்டி நடைபெறாமல் போனால், ஐபிஎல் வெற்றி கோப்பை குஜராத் அணிக்கு கொடுக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அது ஏனென்றால், நடைபெற்ற ஐபிஎல் தொடரின் லீக் சுற்று முடிவு புள்ளிப் பட்டியலில் குஜராத் அணி 20 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது. சென்னை அணி 17 புள்ளிகள் எடுத்து 2வது இடத்தில் உள்ளது.

இன்று போட்டி மழையால் தடைப்பட்டால் முதலிடத்தில் இருக்கும் குஜராத் அணிக்கு கோப்பை வழங்கப்படும் என்று கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

ipl-2023-dhoni-chennai-gujarat
@IPL 

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், இன்று ஐபிஎல் இறுதிப்போட்டி நடக்கும் என்று நம்புகிறேன். 5 ஓவர்கள் கொண்ட போட்டியாக நிர்ணயிக்கப்பட்டு, விளையாட முடியாமல் போனால் சூப்பர் ஓவர் முறை இருக்கும். அதுவும் முடியாவிட்டால், புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள குஜராத் அணிக்கு கோப்பை வழங்கப்படும் என்று பதிவிட்டுள்ளார்.

தற்போது இது தொடர்பான தகவல் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் நிச்சயம் இறுதிப்போட்டி நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.   

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.