Kamal Haasan:நான் அன்றே சொன்னேன், யாரும் என் பேச்சை கேட்கல: கமல் ஹாசன்

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
Kamal Haasan Interview: ஓடிடி புரட்சி வரும் என எனக்கு ஏற்கனவே தெரியும் என்று கமல் ஹாசன் கூறியிருக்கிறார்.

​கமல்​குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்கு வந்த கமல் ஹாசன் வளர்ந்த பிறகு ஹீரோவானார். பல்வேறு மொழி படங்களில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வருகிறார். சினிமாவில் புதுமையை புகுத்துவதில் ஆர்வமிக்கவர் கமல் ஹாசன். இந்நிலையில் அபுதாபியில் நடந்த சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் கமல் ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவித்தார்கள்.அபர்சக்தி குரானா​பாலிவுட் அப்டேட் : Aparshakti Khurana Spotted at Airport Departure _ Aparshkati khurana _​​ஓடிடி​இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தான் கமல் ஹாசனுக்கு விருதை வழங்கினார். செய்தியாளர்களை சந்தித்தார் கமல் ஹாசன். சினிமா ரசிகர்களை கவர்ந்திருக்கும் ஓடிடி பற்றி உங்களுடைய கருத்து என்னவென்று கமலிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது, ஓடிடி புரட்சி வருகிறது என்பதை அனைவருக்கும் முன்பாக அறிந்தவன் நான். ஓடிடி வருகிறது, நாம் அதில் கவனம் செலுத்த வேண்டும் என்று அனைவரிடமும் கூறினேன். ஆனால் யாரும் என் பேச்சை கேட்கவில்லை. நான் சொல்லியது தற்போது தான் அனைவருக்கும் புரிகிறது. இந்திய ரசிகர்களுக்கு சர்வதேச சினிமாவை பார்க்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்றார்.

​ரசிகன்​கமல் ஹாசன் மேலும் கூறியதாவது, நான் சினிமா ரசிகன். நான் பார்க்க விரும்பும் படங்களை எடுக்கிறேன். சில சமயங்களில் அது போன்ற படங்களில் நான் என்னை தொடர்புபடுத்திக் கொள்கிறேன். ஆனால் அவற்றில் நடிப்பது இல்லை. அதை தயாரிக்கிறேன். அதை தற்போதும் செய்து கொண்டிருக்கிறேன். தற்போது நான் சில படங்களை தயாரிக்கிறேன். அந்த படங்களுக்கு பணம் செலவு செய்வதை தவிர வேறு எதுவும் செய்யவில்லை என்றார்.
​அப்டேட்​நம்மை நாம் அப்டேட் செய்து கொண்டே இருக்க வேண்டும். அப்படி செய்தால் தான் பிழைக்க முடியும். உலகிலேயே அதிக படங்களை நாம் தான் அளிக்கிறோம். ஆனால் போதிய அளவுக்கு பயிற்சி மையங்கள் இல்லை. கிரிக்கெட் கற்றுக் கொள்ள பல இடங்கள் இருக்கிறது. ஆனால் சினிமாவுக்கு அப்படி எதுவும் இல்லை. நான் யாரையும் குறை சொல்லவில்லை என்று கமல் ஹாசன் தெரிவித்தார்.

​இந்தியன் 2​கமல் ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். காஜல் அகர்வால் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். கொரோனா வைரஸ் பிரச்சனை ஏற்படுவதற்கு முன்பு இந்தியன் 2 பட ஷூட்டிங் துவங்கப்பட்டது. செட்டில் கிரேனே விழுந்த விபத்தில் 3 பேர் பலியானதை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. அது அண்மையில் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

​Kamal Haasan:யாரும் எதிர்பாராத ஆளுடன் கூட்டணி சேர்ந்த கமல்: இவர் லிஸ்டலயே இல்லயே ஆண்டவரே

​ரசிகர்கள்​கமல் ஹாசன் அதிக படங்களில் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் விரும்புகிறார்கள். ஆனால் அவரோ அதிக படங்களை தயாரித்துக் கொண்டிருக்கிறார். ஆண்டவரே, தயாரிப்பது எல்லாம் சரி தான். ஆனால் நாங்கள் உங்களை தான் பெரிய திரையில் அதிகம் பார்க்க விரும்புகிறோம். அதனால் கூடுதல் படங்களில் நடிக்க ஒப்புக் கொள்ளுங்கள் என ரசிர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். கமல் நடிப்பில் கடைசியாக வெளியான விக்ரம் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய அந்த படம் கமலின் கெரியரில் அதிகம் வசூல் செய்த படமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

​Kamal Haasan:நேர்மாறாக செய்யும் கமல்: என்ன ஆண்டவரே, இப்படி பண்றீங்களே

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.