சென்னை : நடிகர் விஜய் தற்போது லியோ படத்தின் சூட்டிங்கில் உள்ளார். இந்தப் படத்தின் பிரம்மாண்டமான பாடல் காட்சி தற்போது படமாக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து லியோ படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகளும் சென்னையில் படமாக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் படத்தின் சூட்டிங்கை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் இணையவுள்ளார் நடிகர் விஜய். இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார்.
மங்காத்தா போலவே தளபதி 68லயும் சூப்பர் பிஜிஎம் அமையும் என யுவன் உறுதி : நடிகர் விஜய்யின் லியோ படம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த பிப்ரவரியில் துவங்கி தொடர்ந்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது. காஷ்மீரில் தொடர்ந்து 50 நாட்கள் நடந்த இந்தப் படத்தின் சூட்டிங், தற்போது சென்னையில் பிரம்மாண்டமான செட்கள் போடப்பட்டு நடந்து வருகிறது. தற்போது சென்னையில் இந்தப் படத்தின் சூப்பர் பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து இந்தப் பாடலுக்கான ரிகர்சல் 10 நாட்கள் நடத்தப்பட்டு தற்போது பாடல் காட்சியின் சூட்டிங் நடந்து வருகிறது.
இதையடுத்து படத்திக் க்ளைமாக்ஸ் காட்சிகளும் படமாக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளன. இந்த மாதத்திற்குள் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்து தொடர்ந்து 3 மாதங்கள் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகளை மேற்கொள்ளவும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளார். படம் அக்டோபர் 19ம் தேதி ரிலீசாகவுள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, அடுத்தடுத்து படத்தின் டீசர், ட்ரெயிலர் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்த மாதம் விஜய்யின் பிறந்தநாளையொட்டி படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ அல்லது பர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்திலும் கமிட்டாகியுள்ளார் விஜய். லியோ படத்தின் சூட்டிங்கை முடித்துக் கொண்டு, இந்தப் படத்தின் சூட்டிங்கில் அவர் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, கோவாவில் வெங்கட் பிரபு உள்ளிட்டவர் படக்குழுவினர் ஸ்டோரி டிஸ்கஷனில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே விஜய் பிறந்தநாளில் இந்தப் படத்தின் டைட்டில் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. முன்னதாக இந்தப் படத்தின் டைட்டில் சிஎஸ்கே என்று வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. கிரிக்கெட்டிற்கும் வெங்கட் பிரபுவிற்கும் அதிகமான பிணைப்பு காணப்படுவதால், இந்த தலைப்பு வைக்கப்படவும் அதிக வாய்ப்புகள் உள்ளது. இந்தப் படத்தின் இசையமைப்பாளராக வெங்கட் பிரபுவிற்கு பிடித்தமான யுவன் சங்கர் ராஜா கமிட்டாகியுள்ளார்.
இந்நிலையில் யுவன் தனது சமீபத்திய பேட்டியிவ், விஜய் படத்தில் கமிட்டாகியுள்ளது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய பெஸ்ட்டை இந்தப் படத்தில் கொடுப்பேன் என்றும் கூறியுள்ளார். பிஜிஎம் கிங் என்று புகழப்படும் யுவன், மங்காத்தாவில் சிறப்பான பிஜிஎம்மை கொடுத்து ரசிகர்களை கவர்ந்த நிலையில், அந்த அளவிற்கு தளபதி 68 படத்திலும் சிறப்பான பிஜிஎம் அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.