
செர்பியா நாட்டு பப்பில் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு குத்தாட்டம் போட்ட சமந்தா!
ஹாலிவுட்டில் பிரியங்கா சோப்ரா நடித்து வரும் சிட்டாடல் வெப் தொடரின் ஹிந்தி ரீமேக்கில் தற்போது சமந்தா நடித்து வருகிறார். ஏற்கனவே ஹிந்தியில் அவர் நடித்த தி பேமிலிமேன்- 2 என்ற வெப் தொடரை இயக்கிய ராஜ் மற்றும் டிகே ஆகிய இருவரும் தான் இந்த சிட்டாடல் தொடரையும் இயக்கி வருகிறார்கள். இதில் சமந்தாவுக்கு ஜோடியாக வருண் தவான் நடிக்கிறார். இவர்கள் நடிக்கும் காட்சிகள் தற்போது செர்பியா நாட்டில் படமாக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அங்குள்ள ஒரு பப்புக்கு சிட்டாடல் படக்குழு சென்றுள்ளது. அப்போது புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஊ சொல்றியா மாமா பாடலின் தெலுங்கு பதிப்பான ஊ அண்டவா என்ற பாடல் ஒளிபரப்பப்பட்டு உள்ளது. அதையடுத்து அனைவரும் சமந்தாவை அதற்கு நடனமாடுமாறு கேட்டுக் கொண்டதை அடுத்து, அந்த பப்பில் கூடியிருந்த அனைவரும் முன்னிலையிலும் நடனமாடி இருக்கிறார். இது குறித்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.