OTT Releases This Week : ஓடிடியில் இந்த வாரம் வெளியாகும் படங்களின் லிஸ்ட்!

சென்னை :இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம். விடுமுறை நாட்களில் வீட்டில் இருந்தபடியே படங்களை பார்த்து ரசிக்க ஓடிடி தளங்கள் பெரும் உதவியாக உள்ளது.

திரையரங்கில் படங்கள் வெளியாவதை காட்டிலும், ஓடிடி ரிலீஸூக்கு காத்திருக்கும் ரசிகர்கள் கூட்டம் பெருகி விட்டது.

அந்த வகையில் இந்த வாரம் ஓடிடியில் பிச்சைக்காரன் 2, ஃபர்ஹானா, ராவணக்கோட்டம் என பல படங்கள் வெளியாக உள்ளன. அவ்வாறு ரிலீஸாகும் படங்கள் குறித்து பார்ப்போம்.

பிச்சைக்காரன் 2: இசையமைப்பாளர், இயக்குநர், நடிகர் என பல ஆவதாரத்தை விஜய் ஆண்டனி எடுத்து பிச்சைக்காரன் என்ற மாஸ் ஹிட் படத்தை கொடுத்துள்ளார். இதில், காவ்யா தபார், ஹரீஷ் பெராடி, ஜான் விஜய், ராதாரவி, மன்சூர் அலிகான், தேவ் கில், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். இதற்கு ஓம் நாராயணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் ஜூன் 17ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

ஃபர்ஹானா : நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஜித்தன் ரமேஷ், செல்வராகவன் உள்ளிட்டோர் நடிப்பில் இன்று வெளியான திரைப்படம் ஃபர்ஹானா. இந்த படம் ரிலீஸ் ஆகுவதற்கு முன்பே பல எதிர்ப்புகளை கிளப்பிய நிலையில், படத்தைப் பார்த்த பலரும் பாசிட்டிவ்வான விமர்சனத்தை கொடுத்தனர். இத்திரைப்படம் ஜூன் 16ஆம் தேதி பிரபல OTT தளமான சோனி லிவ்வில் வெளியாக உள்ளது.

இராவணக்கோட்டம் : ஷாந்தனு பாக்யராஜ். இவர் ஹீரோவாக நடித்த இராவண கோட்டம் கடந்த மே 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில், ஷாந்தனுவிற்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடித்துள்ளார். இத்திரைப்படம் சீமைக்கருவேல மரங்களுக்குப் பின்னால் உள்ள கார்ப்பரேட் அரசியலை அழகாக பேசி உள்ளது. இப்படம் வருகிற ஜூன் 16ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது.

ஜீ கர்தா :தமன்னா நடித்துள்ள இணையத் தொடர்தான் ஜீகர்தா. இந்தத் தொடரில் ஆஷிம் குலாட்டி, சுஹைல் நய்யார், அன்யா சிங், ஹுசைன் தலால், சயான் பானர்ஜி மற்றும் சம்வேத்னா சுவால்கா என ஏழு சிறுவதில் இருந்து நண்பர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்குள் நடக்கும் சண்டை, பிரிவு, காதல் தான் ஜீ கர்தா தொடரின் கதையாகும். இத்தொடரை நாளை முதல் அமேசான் பிரைமில் பார்க்கலாம்.

ஐ லவ் யூ : நடிகை ரகுல்ப்ரீத் சிங் மற்றும் பவயில் குலாட்டி நடித்துள்ள ஒரு த்ரில்லர் திரைப்படம் தான் ஐ லவ் யூ. இத்திரைப்படத்தை நிகில் மகாஜன் இயக்கி உள்ளார். மேலும் இப்படத்தில் அக்ஷய் ஓபராய் மற்றும் கிரண் குமார் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படம் ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் ஜூன் 16ந் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.