இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
Ajith Kuamr Villain: அஜித் குமாரின் விடாமுயற்சி படத்தின் முக்கிய வில்லன் யார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள்.
விடாமுயற்சிதுணிவு படத்தை அடுத்து மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கும் படம் விடாமுயற்சி. படப்பிடிப்பை புனேவில் துவங்கப் போகிறார்கள். முதலில் அஜித் தொடர்பான சண்டை காட்சிகளை படமாக்கப் போகிறாராம் மகிழ்திருமேனி. விடாமுயற்சியில் வில்லனாக நடிக்கிறார் அர்ஜுன் தாஸ் என தகவல் வெளியானது. ஆனால் அவர் முக்கிய வில்லனாக இருக்க மாட்டார் என்று கூறப்படுகிறது.சமுத்திரக்கனிஅடுத்து பவன்கல்யாண் படத்துடன் சந்திக்கிறேன்விஜய் சேதுபதிவிடாமுயற்சி படத்தில் யாரை வில்லனாக நடிக்க வைத்தால் அஜித் குமாரின் இமேஜுக்கு சரியாக இருக்கும் என ஏ.கே. ரசிகர்கள் பேசி வருகிறார்கள். லோகேஷ் கனகராஜின் மாஸ்டர் படத்தில் கொடூர வில்லனாக வந்து தியேட்டரை அதிர வைத்த விஜய் சேதுபதியை அஜித் குமாருக்கு வில்லனாக்கினால் பொருத்தமாக இருக்கும் என்கிறார்கள் ரசிகர்கள். அஜித்துக்கு வில்லனாக நடிக்கிறீர்களா என்று கேட்டால் விஜய் சேதுபதி நிச்சயம் நோ சொல்ல மாட்டார்.
அருண் விஜய்என்னை அறிந்தால் படத்தில் அஜித் குமாருக்கு வில்லனாக நடித்த அருண் விஜய்யையே மீண்டும் விடாமுயற்சியில் வில்லனாக்கலாம். ஆனால் அவர் தற்போது ஹீரோவாக மட்டுமே நடித்து வருகிறார். அதனால் அஜித் படத்தில் வில்லனாக நடிக்க அருண் விஜய் ஒப்புக்கொள்வாரா என்பது தெரியவில்லை. ஹீரோ இமேஜில் செட்டான பிறகு அதை மாற்றிக்கொள்ள பலர் விரும்ப மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Rajinikanth: கமலின் விக்ரமால் ஜெயிலரின் மொத்த பிளானையும் மாற்றிய ரஜினி: இது வேற லெவல்
ஃபஹத் ஃபாசில்மலையாள நடிகரான ஃபஹத் ஃபாசிலை விட மொரட்டு வில்லன் கிடைக்க மாட்டார். அவர் வில்லத்தனம் செய்வதை பார்த்தால் இது நடிப்பு என்பதை மறந்து ரசிகர்கள் சாபமே விடுவார்கள். அந்த அளவுக்கு அவர் அற்புதமாக வில்லத்தனம் செய்வார். அவரை அஜித் குமாருக்கு வில்லனாக நடிக்க வைத்தால் மாஸாகத் தான் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஃபஹதும் தற்போது தமிழ் படங்களில் அதிக அளவில் கவனம் செலுத்தி வருகிறார்.
எஸ்.ஜே.சூர்யாPriya Bhavani Shankar: சினிமாவில் மட்டுமா, எல்லா துறையிலும் பெண்களுக்கு அந்த கொடுமை நடக்குது: ப்ரியா பவானிசங்கர்அஜித்தை வைத்து வாலி படத்தை இயக்கிய எஸ்.ஜே. சூர்யா தற்போது ஹீரோ, வில்லன் என கலக்கிக் கொண்டிருக்கிறார். அடுத்தவர்களை கதறவிட்டு ரசிப்பதில் அவரை அடித்துக்கொள்ள யாராலும் முடியாது. தன் முதல் பட ஹீரோவுக்கே அவர் வில்லனாக நடித்தால் அதை விட தரமான சம்பவம் வேறு எதுவும் இருக்க முடியாது. ஆனால் அதற்கு மகிழ்திருமேனி மனது வைக்க வேண்டும்.
அரவிந்த்சாமிகட்டினால் அரவிந்த்சாமி மாதிரி மாப்பிள்ளையை தான் கட்டுவேன் என பெண்கள் அடம்பிடித்த காலம் உண்டு. தற்போது அந்த அழகிய ராட்சசன் கொடூர வில்லனாக நடித்து வருகிறார். அவர் ஹீரோவில் இருந்து வில்லனாகிவிட்டாலும் பெண்களின் மனம் கவர்ந்த நபராகவே இருக்கிறார். அந்த ஹேன்ட்சம் வில்லனை அஜித் குமாருடன் மோதவிட்டுப் பார்த்தாலும் கெத்தாகத் தான் இருக்கும்.
மகிழ்திருமேனிஆர்யா, சயீஷா நடிப்பில் வெளியான டெடி படம் மூலம் நடிகர் அவதாரம் எடுத்தார் மகிழ்திருமேனி. அந்த படத்தில் வில்லனாக மிரட்டியிருந்தார். அதனால் யாரோ ஒருவரை வில்லனாக்குவதற்கு பதில் அவரே அஜித் குமாருக்கு வில்லனாக மாறி பிரச்சனை கொடுத்தால் சிறப்பாக இருக்கும் அல்லவா?. கையில் வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவானேன் மகிழ்திருமேனி?