‘உங்களுக்கு வீடு – நாட்டிற்கு எதிர்காலம்’ வீட்டுதவி தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மாத்தறை மாவட்டத்திற்கு குறைந்த வருமானம் பெறும் 65 குடும்பங்களுக்காக புதிய வீடுகளை நிருமாணிப்பதற்காக 65இலட்சம் ரூபா நிதி உதவி வழங்கும் வைபவம் மின்சக்தி எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தலைமையில் மாத்தறை மாவட்ட செயலக காமினி ஜயசேகர கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இதன்போது ஒரு குடும்பத்திற்கு ஒரு இலட்சம் ரூபா வீதம் திக்வெல்ல பிரதேச செயலகப் பிரிவின் 23 குடும்பங்களுக்காக 23இலட்சம் ரூபாவும், மாத்தறை நகர பிரதேச செயலகப் பிரிவின் 21 குடும்பங்களுக்காக 21இலட்சம் ரூபாவும், கிரிந்த – புஹுல்வெல்ல பிரதேச செயலகத்தின் 18குடும்பங்களுக்காக 18இலட்சம் ரூபாவும், தெவிநுவர பிரதேச செயலகப் பிரிவின் 3 குடும்பங்களுக்கு 3இலட்சம் ரூபாவும் என மொத்தம் 65 இலட்சம் ரூபா நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.
தனக்கென நிரந்தர வீடொன்று என்பது ஒவ்வொருவரும் காணும் ஒரு கனவு, அது நனவாக வேண்டம். அது ஒவ்வொருவரின் உரிமையுமாகும்.
2011வீட்டு தொகை மதிப்பிற்கு இணங்க நாட்டில் வீட்டிற்கான அவசியம் சுமார் 4இலட்சத்துக்கு 55ஆயிரமாகும். இதனை 5இலட்சத்து 34 ஆயிரமாக ஆக அதிகரிக்க வேண்டும். அத்துடன் பெரும்பாலானவர்கள் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களாகும். 2020ஆம் ஆண்டில் தென்னோலை மற்றும் பனையோளை வீடுகளை நாட்டிலிருந்து அகற்றுவதற்கான நிகழ்ச்சித் திட்டமாக ‘உங்களுக்கு வீடு –நாட்டிற்கு எதிர்காலம்” கட்டம் கட்டமாக நடைமுறைப்படுத்தியதுடன் அதற்கிணங்க அமுல்ப்படுத்தப்படும்.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மேற்பார்வையின் கீழ் மற்றும் சம்பந்தப்பட்ட கிராம சேவகர் பிரிவுகளில் ஏனைய அரசாங்க அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் குறித்தி “ உங்களுக்;கு வீடு ஒன்று – நாட்டிற்கு எதிர்காலம்’ வீட்டு உதவி தேசிய வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதேச மக்கள் பிரதிநிதிகள், மாத்தறை மாவட்ட செயலாளர் சட்டத்தரணி வை. விக்கிரமசிறி, வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாத்தறை மாவட்ட முகாமையாளர் ஸ்ரீயானி மல்லிகா மற்றும் பயனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.