ஷாம்லியின் ஓவிய கண்காட்சியை பார்த்து ரசித்த மணிரத்னம், ரஹ்மான்

அஜித்தின் மனைவியும் நடிகையுமான ஷாலினியின் தங்கை ஷாம்லி. குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடித்த ஷாம்லி அதன்பிறகு தமிழில் நாயகியாக சில படங்களில் நடித்தார். அவருக்கு போதிய நாயகி வாய்ப்பு கிடைக்காததால் தனது கவனத்தை ஓவியத்தின் பக்கம் திருப்பினார். வெளிநாட்டில் நவீன ஓவிய பயிற்சி பெற்ற ஷாம்லி தற்போது தான் வரைந்த ஓவியங்களை பல்வேறு இடங்கில் கண்காட்சியாக வைத்துள்ளார். சமீபத்தில் துபாயில் ஓவிய கண்காட்சி நடத்திய ஷாம்லி தற்போது சென்னையில் நடத்துகிறார்.

சென்னை ஆழ்வார்பேட்டை போக்கஸ் ஆர்ட் கேலரியில் நேற்று இந்த கண்காட்சி தொடங்கியது. இதன் துவக்க விழாவில் இயக்குனர் மணிரத்னம், இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், நடிகர்கள் அர்ஜுன், மிர்சி சிவா, நடிகைகள் சுஹாசினி, ஐஸ்வர்யா அர்ஜூன், இயக்குனர் கிருத்திகா உதயநிதி, விஷ்ணுவர்த்தன், ஆர்ட் டைரக்டர் தோட்டா தரணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ஓவியங்களை பார்த்து ரசித்தனர். வந்திருந்தவர்களை ஷாம்லி, ஷாலினி, இவர்களின் சகோதரரர் ரிச்சர்ட் ஆகியோர் வரவேற்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.