சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பாக்கியலட்சுமி தொடர் தற்போது சன் டிவி சீரியல்களை பின்னுக்கு தள்ளிவிட்டு urban categoryயில் முதல் இடத்தை பிடித்துள்ளது.
குறைவான கேரக்டர்களை வைத்துக் கொண்டு இந்த சீரியல் மாஸ் காட்டி வருகிறது. ரசிகர்கள் இந்தத் தொடரை கொண்டாடி வருகின்றனர்.
தற்போது முதலிடத்தை இந்தத் தொடர் பிடித்துள்ளது. முன்னதாக சேனலின் முதலிடத்தை தொடர்ந்து பல வாரங்களாக தக்க வைத்து வந்துள்ளது.
ஒரு மாதத்தில் வீட்டிற்கான பணத்தை கொடுப்பதாக பாக்கியா சபதம்: விஜய் டிவியின் நம்பர் ஒன் தொடராக தொடர்ந்து பல வாரங்களாக முதலிடத்தை தக்க வைத்து வந்துள்ளது பாக்கியலட்சுமி தொடர். பெங்காலியில் மிகவும் ஹிட்டடித்த ஸ்ரீமோயி என்ற தொடரின் ரீமேக்காக தமிழுக்காக சில மாற்றங்களுடன் இந்தத் தொடர் உருவான நிலையில், இந்தத் தொடர் தற்போது மிகப்பெரிய ஹிட்டடித்துள்ளது. சன் டிவி சீரியல்களை பின்னுக்கு தள்ளிவிட்டு Urban categoryயில் இந்தத் தொடர் தற்போது முதலிடத்தை பிடித்துள்ளது.
கோபி, பாக்கியா, ராதிகா மற்றும் இவர்களது சொந்தங்கள் என குறைவான கேரக்டர்களுடன் இந்தத் தொடர் நிறைவான எபிசோட்களை தொடர்ந்து கொடுத்து வருகிறது. கோபி மற்றும் அவரது இரண்டு வாழ்க்கையை மையமாக கொண்டு பாக்கியலட்சுமி தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடர், ஏராளமான ரசிகர்களின் பேவரிட் சீரியலாக உள்ளது. குறிப்பாக கணவன், கைவிட்டாலும் அவரது சொந்தங்களை தன்னுடைய சொந்தங்களாக நினைத்து, வாழ்க்கையில் அப்பாவித்தனமாக இருந்த பாக்கியா, தற்போது தொழிலிலும் சிறப்பாக முன்னேறி வருகிறார்.
தன்னுடைய வளர்ச்சியை தன்னுடைய முன்னாள் கணவர் கோபியே, மிகவும் வியப்பாக பார்க்கும் சூழலையை இந்தத் தொடரின் நாயகி பாக்கியலட்சுமி ஏற்படுத்தியுள்ளார். மசாலா பாக்கெட்டுகளை விற்பனை செய்துவந்த பாக்கியா, தற்போது தனியாக கேட்டரிங் பிசினஸ், கேன்டீன் பிசினஸ் என தன்னை சிறப்பாக வெளிப்படுத்தி வருகிறார். தன்னிடம் இருந்த சமையல் திறமையை அவர் சரியாக பயன்படுத்தியதன் விளைவாக இந்த வெற்றி அவருக்கு சாத்தியப்பட்டுள்ளது.
ஆனாலும் கோபி மற்றும் அவரது இரண்டாவது மனைவி, அவரது மகள் என பாக்கியாவின் வீட்டில் டேரா போட, இது பிடிக்காத கோபியின் அம்மா, அவரிடம் தொடர்ந்து வம்பிழுக்க, ராதிகாவும் அடுத்தடுத்து சூழ்நிலையை இறுக்கமாக்குகிறார். இதனால் அவர்களுக்குள் தொடர்ந்து சண்டை, சச்சரவுகள் ஏற்பட்டு போலீஸ் வரை போகிறது. இந்நிலையில், ராதிகாவின் உறவினர்கள் வீட்டிற்கு வர, ராதிகா மற்றும் ஈஸ்வரி இடையில் மீண்டும் பிரச்சினை வெடிக்கிறது.

இதையடுத்து தன்னுடைய மாமியார் என்றும் பார்க்காமல் வயதான ஈஸ்வரியை ஒறுமையில் திட்டுகிறார் ராதிகா. இதனால், அவர் நிலை தடுமாறுகிறார். இதுகுறித்து தன்னுடைய கணவன் கோபியிடம் வத்தி வைக்கிறார் ராதிகா. இந்த விஷயத்தில் ராதிகாவிற்கு சப்போர்ட் செய்து, பாக்கியாவை திட்டுகிறார் கோபி. இந்நிலையில், இந்த வீட்டை, கோபி தனக்கு விற்பதாக கூறியுள்ளதாகவும் தான் இதற்காக 2 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளதாகவும் பாக்கியா கூறுகிறார்.
தொடர்ந்து பேசும் கோபி, இன்னும் 18 லட்சம் கொடுக்க வேண்டும் என்று கூறுகிறார். இதைக் கேட்கும் பாக்கியா, கோபத்துடன் தான் இன்னும் ஒரு மாதத்தில் கோபிக்கு வீட்டிற்கான பணத்தை கொடுப்பதாகவும், அப்படி கொடுக்கும்பட்சத்தில், தன்னுடைய இரண்டாவது மனைவியை அழைத்துக் கொண்டு அவர் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் கோபத்துடன் கூறுகிறார். இவ்வாறு இந்த வார ப்ரமோ அமைந்துள்ளது. தொடர்ந்து அந்தப் பணத்தை கொடுப்பதற்காக பாக்கியா அடுத்தக்கட்ட நடவடிக்கையில் ஈடுபடுவார் என்று தெரிகிறது.