சென்னை: உதயநிதி, வடிவேலு இணைந்து நடித்துள்ள மாமன்னன் திரைப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ், லால் ஆகியோரும் நடித்துள்ளனர்.
உதயநிதியின் கடைசிப் படமாக சொல்லப்படும் மாமன்னன், வரும் 29ம் தேதி வெளியாகிறது.
இந்நிலையில், உதவி இயக்குநர்களை அடிப்பதாக மாரி செல்வராஜ் மீது எழுந்த விமர்சனத்துக்கு அவரே விளக்கம் அளித்துள்ளார்.
மாமன்னன் சர்ச்சை குறித்து உதயநிதி: பரியேறும் பெருமாள் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். முதல் படமே பலரது கவனத்தையும் ஈர்த்ததை அடுத்து, இரண்டாவதாக தனுஷ் நடிப்பில் கர்ணன் படத்தை இயக்கினர். இந்தப் படமும் சூப்பர் ஹிட் ஆனது. அதன் தொடர்ச்சியாக தற்போது மாமன்னன் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் வரும் 29ம் தேதி ரிலீஸாகிறது.
உதயநிதி, வடிவேலு, ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 1ம் தேதி நடைபெற்றது. அப்போது சிறப்பு விருந்தினராக வந்திருந்த கமல்ஹாசன் முன்னிலையில் தேவர் மகன் படம் குறித்து மாரி செல்வராஜ் பேசியது சர்ச்சையானது. இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து விவாதங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக ஆதிக்கம் அதாவது ஆதிக்க சாதி என்ற வார்த்தை பற்றியும் விவாதம் எழுந்தது.
ஆனால், இந்த வார்த்தையே மாரி செல்வராஜ்க்கும் பேக் ஃபயர் ஆனது. வடிவேலுவும் உதயநிதியும் கலந்துகொண்ட மாமன்னன் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் இயக்குநர் மாரி செல்வராஜ் குறித்து கேட்கப்பட்டது. அப்போது இருவருமே சொல்லி வைத்ததை போல ஒரே பதிலை கூறினர். அதாவது மாரி செல்வராஜ் செம்ம டென்ஷன் பார்ட்டி, ஷூட்டிங் ஸ்பாட்டில் உதவி இயக்குநர்களை அடித்து விரட்டுவார் என ஜாலியாக கலாய்த்தனர்.

அதேநேரம் மாரி செல்வராஜும் பேட்டியொன்றில் தனது உதவி இயக்குநர்கள் குறித்து பேசியிருந்தார். அதில், தனது உதவி இயக்குநர்களை நான் அடித்தால் அதுவும் ஆதிக்கம் தான், அதிகாரம் செலுத்துவதாக அர்த்தம் என குறிப்பிட்டு இருந்தார். இந்த இரண்டு பேட்டிகளும் மாரி செல்வராஜ்ஜுக்கு எதிராகவே திரும்பின. இப்போது மீண்டும் இந்த சர்ச்சை குறித்து மாரி செல்வராஜிடம் ஒரு பேட்டியில் கேள்வி எழுப்பட்டது.
அதாவது, மாரி செல்வராஜ் ஹிட்லர் போல தனது உதவி இயக்குநர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதாக விமர்சனங்கள் வருதே என கேட்கப்பட்டது. அதற்கு விளக்கம் அளித்த இயக்குநர் மாரி செல்வராஜ், இதற்கு எல்லாமே வடிவேலுவும் உதயநிதியும் தான் காரணம் அவர்களை வைத்துக்கொண்டே கூறியுள்ளார். மேலும், நான் ஹிட்லரெல்லாம் கிடையாது பைத்தியக்காரன் என காட்டமாக பதிலளித்துள்ளார்.
அதேபோல், உதவி இயக்குநர்கள் தான் என்னை திட்டுவார்கள், அவர்கள் எல்லாருமே என் ஊர்காரர்கள் தான். அதனால் உரிமையோடு திட்டுவேன், நான் உதவி இயக்குநராக இருந்த போது எனக்கு கிடைத்த அனுபவங்கள் வேறு, இப்போது சினிமாவின் நிலை வேறு. எனவே அவர்கள் வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டும் என்பது தான் எனது ஆசை. ஊரில் என்னை எல்லோரும் பைத்தியக்காரன் என்பார்கள், ஆனால், நான் ஜெயித்த பின்புதான் எல்லாம் மாறியது எனக் கூறியுள்ளார்.