இணையத்தில் கசிந்த ஜியோ ஸ்மார்ட்போன் புகைப்படங்கள்! விலை இவ்வளவு கம்மியா?

ரிலையன்ஸ் ஜியோவின் 5G ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு வெளியிட நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில் அதன் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது.  ட்விட்டர் பயனரான அர்பித் படேல் பகிர்ந்துள்ள படங்களின்படி, ஜியோ ஸ்மார்ட்போனில் பின்புறத்தில் மாத்திரை வடிவ கேமரா பகுதி மற்றும் டான் ரிலையன்ஸின் தனித்துவமான அடர் நீல நிற டோன் இருக்கும்.  கேமரா அமைப்பு 13-மெகாபிக்சல் AI கேமரா மற்றும் 2-மெகாபிக்சல் மேக்ரோ கேமரா ஆகியவற்றைக் கொண்டிருக்கலாம். எல்இடி ஃபிளாஷுக்கு மற்றொரு  இடம் உள்ளது. ட்விட்டர் பதிவில் தொலைபேசியின் முன்பக்கமும் காட்டப்பட்டுள்ளது. 6.6 அங்குல அளவில், முன் பேனலில் வாட்டர் டிராப் நாட்ச் இருக்கலாம். ரூ. 10,000க்கு குறைவான ஸ்மார்ட்போன்களுக்கான பொதுவான வடிவமைப்பு முறையில் உள்ளது. இந்த ஜியோ ஃபோன் 5ஜி விலை  ரூ.10000 மட்டுமே இருக்கும் எனவும் தகவல் வெளியாக்கியுள்ளது.

இணைய வேகச் சோதனையின் அளவு தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், முன் பேனலில் ஜியோ 5G வேகச் சோதனை 479Mbps பதிவிறக்க வேகத்தைக் காட்டுகிறது. புகைப்படங்களில் ஃபோனின் நிலை மிகவும் மோசமாக உள்ளது, இது ஒரு போலி யூனிட் அல்லது தயாரிப்பு யூனிட்டாக இருக்கலாம் என்பதைக் குறிக்கிறது. தற்போதைய ஜியோ ஸ்மார்ட்போன் சில மாற்றங்களுடன் வித்தியாசமாகத் இருக்கலாம். ஜியோ ஃபோன் 5ஜியில் டைமென்சிட்டி 700 SoC அல்லது யுனிசாக் 5ஜி சிப்செட் இருக்கலாம் என்றும் ட்விட்டர் பயனர் குறிப்பிட்டுள்ளார். முன் பேனலில் 5 மெகாபிக்சல் கேமரா இருக்கலாம். ரிலையன்ஸ் ஜியோவின் 5G ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு தீபாவளி தினத்தில் வெளியாகலாம் என்று எதிர்பாக்கப்படுகிறது.

மேலும் ஜியோ பல்வேறு ரிசார்ஜ் திட்டங்களையும் கொண்டுள்ளது. ஜியோவின் 399 ரூபாய் கொண்ட இந்த திட்டத்தின் கீழ் ஜியோ பயனர்கள் 28 நாட்கள் வேலிடிட்டியாகும் மற்றும் மேலே உள்ள திட்டத்தைப் போன்ற டேட்டா, காலிங் மற்றும் SMS போன்ற பலன்களை பெற முடியும். இதை தவிர இந்த திட்டத்தில் JioTV சபஸ்க்ரிப்ஷன், ஜியோ சினிமா, ஜியோசெக்யுரிட்டி  மற்றும் JioCloud போன்ற சபஸ்க்ரிப்ஷன் வழங்கப்படுகிறது இதை தவிர இதில் அன்லிமிடெட் 5G டேட்டா வழங்கப்படுகிறது.ஏர்டேல் ரூ,499 பிளான் ஏர்டெல் ரூ.499 திட்டம்: இந்த திட்டமானது மேற்கண்ட திட்டங்களுக்கு இன்டர்நெட் பலன்களை வழங்குகிறது. பயனர்கள் தினசரி 3 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் காலிங் எஸ்எம்எஸ் மற்றும் பலவற்றை 28 நாட்கள் வேலிடிட்டியாகும் . கூடுதலாக, பயனர்கள் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைலுக்கான 3 மாத சந்தாவையும் வழங்குகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.