சென்னை: தமிழ் , தெலுங்கு படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வரும் சுரேகா வாணி ஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் கசிந்து பேசுபொருளாகி உள்ளது.
தமிழில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் துணை நடிகையாக நடித்து அசத்தியவர் சுரேகா வாணி.
படங்களில் படுபிஸியாக நடித்து வந்தாலும் இன்ஸ்டாகிராமில் தவறாமல் விதவிதமான புகைப்படத்தை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்து இருக்கிறார்.
நடிகை சுரேகா வாணி: தனுஷின் உத்தமபுத்திரன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் அறிமுகமான சுரேகா வாணி, அடுத்ததாக சித்தார்த் நடித்த காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தில் அமலாபாலுக்கு அம்மாவாக நடித்திருந்தார். பின் விக்ரம் நடித்த தெய்வமகன் படத்தில் எம்.எஸ். பாஸ்கருக்கு மனைவியாக நடித்திருப்பார்.
துணை நடிகையாக: ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட சுரேகா வாணி, 2005ம் ஆண்டில் இருந்து தற்போது வரை பல்வேறு படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இவருக்கு தமிழ் படங்களை விட தெலுங்கில் அதிக வாய்ப்புகள் வருகின்றன. தெலுங்கில் பல முன்னணி நடிகர்களின் அம்மா, அக்கா, அண்ணி போன்ற துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
கணவர் இறந்தார்: நடிகை சுரேகா வாணியின் கணவர் சுரேஷ் தேஜா 2019ம் ஆண்டு உடல்நலக் குறைவு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தீவிர சிகிச்சையின் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த தம்பதிகளுக்கு சுப்ரிதா என்கிற மகள் உள்ளார். தற்போது தன்னுடைய மகளுடன் சுரேகா வாணி வசித்து வருகிறார்.

ஆண் நண்பருடன்: இவர் தனது மகளின் சம்மதத்துடன் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருப்பதாக அவ்வப்போது சோஷியல் மீடியாவில் செய்திகள் பரவியது. ஆனால், இதுகுறித்து நடிகை சுரேகா வாணி எந்த பதிலும் தெரிவிக்காமல் மௌனம் காத்து வந்த நிலையில், தன்னுடைய ஆண் நண்பருடன் தனிமையில் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
10 குறைவானவர்: நடிகை சுரேகா வாணிக்கு 45 வயதாகும் நிலையில் அவருடைய ஆண் நண்பருக்கு 36 வயதாகிறது. தன்னைவிட 10 வயது குறைவான தனது ஆண் நண்பரை திருமணம் செய்து கொள்ளப்போவதாக சொல்லப்படுகிறது. ஆனால், அது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.