
ஹரிஷ் கல்யாண் நடிக்கும் பார்கிங்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர் ஹரிஷ் கல்யாண். இப்போது டீசல், எல். ஜி. எம் போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த படங்கள் விரைவில் ரிலீஸ் ஆகிறது. இந்த நிலையில் இன்று தனது புதிய படத்தின் டைட்டில் போஸ்டரை வெளியிட்டுள்ளார். புதுமுக இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் இப்படத்தில் ஹரிஷ் கல்யாண்க்கு ஜோடியாக நடிகை இந்துஜா நடித்துள்ளார். ஹோல்டர்ஸ் பிலிம் பேக்டரி மற்றும் பெசன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு சாம்.சி.ஸ் இசையமைக்கிறார். மேலும், பர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகும் என தெரிவித்துள்ளனர்.