சிக்கமகளூரு:சிக்கமகளூரில் கொலை செய்யப்பட்ட பா.ஜ., பிரமுகர் அன்வரின் குடும்பத்தினர், ‘கருணைக் கொலை செய்து கொள்ள அனுமதி கொடுங்கள்’ என, ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு நகரத்தில் வசித்தவர் முகமது அன்வர், 40. பா.ஜ., தேசிய பொதுச் செயலர் ரவியின் நெருங்கிய ஆதரவாளர் மற்றும் சிக்கமகளூரு மாவட்ட பா.ஜ., பொதுச் செயலராகவும் இருந்தார்.
கவுரிகலுவே என்ற இடத்தில், 2018ம் ஆண்டு ஜனவரியில், மர்ம நபர்களால் அன்வர் கொலை செய்யப்பட்டார். சிக்கமகளூரு போலீசார் விசாரித்தனர். பா.ஜ., ஆட்சியில் சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
இந்த வழக்கில் இதுவரை, ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை. சரியான விசாரணை நடக்கவில்லை என, அவர் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு, முகமது அன்வர் குடும்பத்தினர் கடிதம் எழுதியுள்ளனர்.
அதில், ‘முகமது அன்வரை கொன்றவர்களை கைது செய்ய, போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கொலை நடந்து ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. யாரையும் கைது செய்யவில்லை.
‘யார் கொன்றனர் என்றும் தெரியவில்லை. இதனால், நாங்கள் மிகுந்த மன உளைச்சலில் உள்ளோம். கருணைக் கொலை செய்து கொள்ள எங்களுக்கு அனுமதி கொடுங்கள்’ என கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement