தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் லண்டன் பயணத்தை வைத்து அவரை நக்கலடித்துள்ளார் எஸ்வி சேகர்.
எஸ்வி சேகர்தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரான எஸ்வி சேகருக்கும் ஆரம்பம் முதலே ஏழாம் பொருத்தமாக இருந்து வருகிறது. அண்ணாமலை பிராமணர்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார் என குற்றம் சாட்டி வரும் எஸ்வி சேகர், கட்சியில் மூத்த நிர்வாகிகளுக்கு மரியாதை இல்லை, அவமதிக்கப்படுகிறார்கள் என விமர்சித்து வருகிறார்.பிராமணர்களுக்கு தனிக்கட்சிசமீபத்தில் தனக்கு வெளிநாடுகளில் இருந்து கொலை மிரட்டல் வருவதாக சென்னை பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்து பரபரப்பை கிளப்பினார் எஸ்வி சேகர். மேலும் பிராமணர்களுக்கு என தனிக்கட்சி தொடங்கி, வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு பலத்தை காட்டப்போவதாகவும் எஸ்வி சேகர் தெரிவித்திருந்தார்.
மோடி மட்டும்தான் தலைவர்தமிழ் நாட்டி 40 லட்சம் பிராமணர்கள் இருப்பதாகவும் ஆனால் ஒரு பிராமணர் கூட எம்எல்ஏவாக இல்லை என்றும் கூறி வேதனைப்பட்டிருந்தார் எஸ்வி சேகர். பிராமணர்களுக்கான கட்சி செயல்பட தொடங்கிய பிறகுதான் பாஜகவில் இருந்து விலகுவேன் என்றும் பிரதமர் மோடி மட்டுமே தனது தலைவர் என்றும் கூறியிருந்தார்.
மறைமுக விமர்சனம்தொடர்ந்து அண்ணாமலையை மறைமுகமாக விமர்சித்து வரும் எஸ்வி சேகர் அவ்வப்போது ஆடு புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் எஸ்வி சேகர் பதிவிட்டுள்ள டிவீட் ஒன்று கவனத்தை பெற்று வருகிறது. அதாவது அண்ணாமலை லண்டன் சென்றுள்ளதை வைத்து மறைமுகமாக சீண்டியுள்ளார் எஸ்வி சேகர்.
சம்பாதித்ததை பதுக்கவாஅதில் பெயரை குறிப்பிடாமல் திடீர் லண்டன் பயணம் ஏன் என கேட்டு, பதிலும் அவரே கூறியிருக்கிறார். எதிர்க்கட்சி ஆளுங்க கள்ள பணத்தை அங்கே பதுக்கி வைத்திருப்பதை கண்டுபிடித்து, அதே இடத்தில் தான் சம்பாதித்ததை பதுக்கி வைத்துவிட்டு 4 கோவிலுக்கு சென்று 5 ஐயருகளை பார்த்து ஆசி வாங்கிவிட்டு வந்துவிடுவேன் என கூறுவதாக பதிவிட்டுள்ளார்.லண்டனில் அண்ணாமலைஅண்ணாமலை தற்போது லண்டன் சென்றுள்ள நிலையி அவரை மறைமுகமாக குறிப்பிட்டே எஸ்வி சேகர் இந்த டிவீட்டை பதிவிட்டுள்ளதாக நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர். முன்னதாக பேட்டி ஒன்றில் பேசிய எஸ்வி சேகர், அண்ணாமலை சம்பாதித்துள்ள பணத்தில் அவர் தனியாக கட்சி தொடங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்று கூறியது குறிப்பிடத்தக்கது.எஸ்வி சேகர் ட்வீட்