கிராமிய மேம்பாட்டிற்கான விவசாய ஊக்குவிப்புத் திட்டத்தின் அடிப்படையில், யாழ் மாவட்ட விவசாயிகளுக்கான தானிய விதைகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சம்பிரதாயபூர்வமாக நேற்று வழங்கி வைத்தார்.
குறித்த திட்டத்திற்காக யாழ்ப்பாண மாவட்டத்திற்கு சுமார் 44 இலட்சத்து 55 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் 12 பிரதேச செயலகங்களை சேர்ந்த 646 பயனாளர்களுக்கு பயறு விதைகளும் 294 பயனாளர்களுக்கு உழுந்து விதைகளும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.