சென்னை: பாப் இசை உலகின் முடிசூடா மன்னனாக வலம் வந்தவர் மைக்கேல் ஜாக்சன்.
அமெரிக்காவை பூர்வீகமாக கொண்ட இவருக்கு உலகம் முழுவதும் பல கோடி ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த 2009ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி திடீரென உயிரிழந்தார் மைக்கேல் ஜாக்சன்.
மைக்கேல் ஜாக்சன் நினைவு நாளான இன்று அவரது ஸ்டைலில் இந்திய மைக்கேல் ஜாக்சன் பிரபுதேவா கோரியோகிராபி செய்த பாடல்களை இப்போது பார்க்கலாம்.
மைக்கேல் ஜாக்சன் நினைவு தினம்:பாப் இசை உலகின் மிகப் பெரிய புரட்சி செய்தவர் மைக்கேல் ஜாக்சன். அமெரிக்காவைச் சேர்ந்த மைக்கேல் ஜாக்சனின் பாடல்களுக்கும் அவரது நடனத்துக்கும் பல கோடி ரசிகர்கள் உள்ளனர். மொழி, நாடு, இனம் என பல தடைகளையும் கடந்து தனது நடனத்தால் இசை உலகை ஆட்சி செய்தவர் என்றால் மிகையாகாது. மைக்கேல் ஜாக்சனின் ஸ்டைல் என்ற தனித்துவத்தை தனது நடனத்தில் கொண்டு வந்தார்.
இந்நிலையில், கடந்த 2009ம் ஆண்டு இதேநாளில் திடீரென உயிரிழந்தார் மைக்கேல் ஜாக்சன். அவரது வாழ்க்கை வரலாறு தற்போது திரைப்படமாக உருவாகி வருகிறது. மைக்கேல் என்ற டைட்டிலில் உருவாகும் இப்படத்தில், மைக்கேல் ஜாக்சனின் சகோதரர் ஜெமைன் ஜாக்சனின் மகன் ஜாஃபர் ஜாக்சன், மைக்கேல் ஜாக்சனாக நடிக்கிறார். மைக்கேல் ஜாக்சன் நடனத்தை அப்படியே நகலெடுத்தவர்களில் பிரபுதேவாவும் குறிப்பிடத்தக்கவர். காஸ்ட்யூம் முதல் டான்ஸ் ஸ்டெப் முதல் அனைத்தும் மைக்கேல் ஜாக்சனை கண்முன் நிறுத்தும். அப்படியான 5 பாடல்களை இப்போது பார்க்கலாம்.

1. ‘மெட்ரோ சேனல்’ என்ற பாடலில் அப்படியே மைக்கேல் ஜாக்சனாக மிரட்டியிருப்பார் பிரபுதேவா. இந்து படத்தில் இடம்பெற்ற இப்பாடலுக்கு தேவா இசையமைக்க, பிரபுதேவாவும் குஷ்பூவும் நடனமாடியிருப்பார்கள். காஸ்ட்யூம் முதல் ஒவ்வொரு ஸ்டெப்பிலும் மைக்கேல் ஜாக்சனை பார்க்கலாம்.

2. ‘முக்கலா முக்காபுலா’ பாடல் இன்னொரு மைக்கே ஜாக்சன் வெர்ஷன் எனலாம். இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையில் பிரபுதேவாவும் நக்மாவும் இணைந்து நடனமாடியிருப்பார்கள். ஷங்கர் இயக்கிய காதலன் படத்தில் இடம்பெற்ற இப்பாடல், பிரபுதேவாவின் பெஸ்ட் கோரியோகிராபியில் ஒன்று. முழுவதும் மைக்கேல் ஜாக்சன் ஸ்டைலில் மாஸ் காட்டியிருப்பார்.

3. ‘ரோமியோ ஆட்டம் போட்டால்’ என்ற இந்தப் பாடலும் பிரபுதேவாவின் மைக்கேல் ஜாக்சன் வெர்ஷனாகவே உருவானது. மிஸ்டர் ரோமியோ படத்திற்காக ஏஆர் ரஹ்மான் இசையமைத்த இப்பாடலிலும் பிரபுதேவா அப்படியே மைக்கேல் ஜாக்சனாக மாறியிருப்பார். 90களில் பள்ளி, கல்லூரி விழாக்களில் இப்பாடல் தான் பலரையும் ஆட்டம் போட வைத்தது.

4. ‘சிக்கு புக்கு ரயிலே’ பாடலையும் இந்த வரிசையில் கண்டிப்பாக சேர்க்கலாம். ஜென்டில்மேன் படத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் இடம்பெற்ற இப்பாடலில் பிரபுதேவா, அவரது அண்ணன் ராஜூ சுந்தரம், கெளதமி ஆகியோரும் நடனமாடி அசத்தியிருந்தனர். சிக்கு புக்கு ரயிலே பாடலையும் மைக்கேல் ஜாக்சன் ஸ்டைலில் கோரியோகிராபி செய்திருந்தார் பிரபுதேவா.

5. ‘ராஜா ராஜாத்தி ராஜன் இந்த ராஜா’ தான் பிரபுதேவா கோரியோகிராப் செய்த முதல் பாடல். அக்னி நட்சத்திரம் படத்திற்காக அவரது அப்பா கோரியோகிராப் செய்திருக்க வேண்டிய பாடல் பிரபுதேவாவின் கைகளுக்கு செல்கிறது. முதல் பாடலிலேயே மைக்கேல் ஜாக்சன் ஸ்டைலை உள்வாங்கி, நவரச நாயகன் கார்த்திக்கை ஆட வைத்து கெத்து காட்டினார். இப்பாடலிலும் மைக்கேல் ஜாக்சன் ஸ்டைலில் உருவானது தான்.