குவஹாத்தி: இந்திய மல்யுத்த கூட்டமைப்பில் உறுப்பினராக சேர்க்க வலியுறுத்தி, அசாம் மல்யுத்த சங்கம் தொடர்ந்த வழக்கில், அந்த கூட்டமைப்பின் தேர்தலுக்கு குவஹாத்தி உயர் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் உறுப்பினராக இருக்க உரிமை இருந்தும், இதற்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை எனக் கூறி, அசாம் மல்யுத்த சங்கம் சார்பில் குவஹாத்தி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ‘கடந்த 2014ல் கூட்டமைப்புகளின் நிர்வாகக் குழு, இணைப்புக்கான பரிந்துரையை வழங்கியது. ஆனால் அதற்கான அங்கீகாரம் வழங்கப்படவில்லை. எங்கள் பிரதிநிதிகள் இல்லாததால், இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கான தேர்தலை நிறுத்த வேண்டும்’ என அசாம் மல்யுத்த சங்கம் சார்பில் வாதிடப்பட்டது.
இதையடுத்து, இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கான தேர்தலுக்கு தடை விதித்த நீதிமன்றம், வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 17ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement